5/12/2010

இழப்புகளும் துன்பங்களும் முடிந்துபோனவை ஆகட்டும்


அரசாங்கத்துடன் உத்தியோகப் பற்றற்ற முறையில் கருத்துப் பரிமாறல் இடம்பெறுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம் பந்தன் ஆங்கில வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குக் கூறியிருக்கின்றார்.
அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறிய செய்தி யும் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. இரண்டுமே இனிப்பான தகவல்கள். இப் பேச்சுவார்த்தை பயனுறு வகையில் இடம்பெற வேண்டும் என்பது தமிழ் பேசும் மக்கள் மாத்திரமன்றி நாட்டு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகக் கடந்த காலங்களில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றி ருக்கின்றன. அவை தோல்வியிலேயே முடிந்தன. இத் தோல்விகள் தமிழ் அரசுவழிச் சமூகத்தில் தீவிரவாதம் தலைதூக்குவதற்குக் காரணமாக இருந்தன என்பதைத் தமிழ்த் தலைவர்கள் அடிக்கடி கூறுவது வழக்கம்.
தேர்தல் மேடைகளில் இதை அவர்கள் வலியுறுத்தத் தவறுவதில்லை. சிங்களத் தலைவர்கள் ஒருபோதும் அரசியல் தீர்வுக்குச் சம்மதிக்க மாட்டார்கள் எனக் கூறுவதற்காகவே தோல்வியடைந்த பேச்சுவார்த்தைகளை நினைவூட்டினார்கள். இது அவர்களுக்கு வாக்குகளைப் பெற்றுக் கொடுத்த அதே நேரம் தீவிரவாத சிந்தனைக்கு வித்திட்டுத் தமிழ் மக்களின் பேரழிவுக்கு வழிவகுத்த தென்பதை இங்கு குறிப்பிடாதிருக்க முடியாது.
முன்னைய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்கான காரணங்களை விளங்கிக் கொண்டால் எதிர்காலப் பேச்சு வார்த்தையை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் சிரமம் இருக்காது. கடந்த காலப் பேச்சுவார்த்தைகள் தோல்வி யடைந்ததற்குப் பிரதானமாக இரண்டு காரணங்களைக் கூறலாம். நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை வலியுறுத்தியது ஒரு காரணம். பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அரசாங்கங்களுக்குத் தெற்கில் பெருமளவு ஆத ரவு இல்லாதிருந்தமை மற்றைய காரணம். வேறு அக வயக் காரணிகள் உள்ள போதிலும் இவையிரண்டும் பிரதானமானவை.
இன்றைய அரசாங்கம் தெற்கில் மிகப் பெருமளவு ஆதரவைக் கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளிலும் பொதுத் தேர்தல் முடிவுகளிலுமிருந்து இதை விளங்கிக்கொள்ளலாம். இன்றைய அரசாங்கத் துடனான பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகளை இலகுவாக நடைமுறைப்படுத்த முடியும் என்பதே இதன் அர்த்தம். பேச்சுவார்த்தை வெற்றியளிப்பதற்குத் தேவைப் படுவது தமிழ்த் தரப்பினரின் யதார்த்தபூர்வ அணுகு முறை. அதாவது இன்றைய நிலையில் நடைமுறைச் சாத்தியமான தீர்வை ஏற்பதும் முழுமையான அரசியல் தீர்வுக்காகத் தொடர்ந்து முயற்சிப்பதுமான ஆக்கபூர்வ அணுகுமுறை.
கடந்த காலத் தோல்விகளும் துயரங்களும் தமிழ்த் தலைவர்களுக்குப் படிப்பினையாக அமைய வேண்டும். கிடைக்கும் தீர்வைக் கூடுதலான அதிகாரங்களை வலி யுறுத்தி நிராகரிப்பதே கடந்தகால வரலாறாக இருந்தது. இதன் பாரதூரமான விளைவை அனுபவத்தில் பார்த்து விட்டோம். தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து செல்ல நேர்ந் ததும் இடம்பெயர்ந்து வாழ்வதும் உடைமைகளையும் உடன்பிறப்புகளையும் இழந்ததும் தலைவர்களின் தவ றான அணுகுமுறையின் விளைவுகள்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகும் தலை வர்கள் தமிழ் மக்கள் இதுவரை முகங்கொடுத்த துன் பங்களும் இழப்புகளும் மீண்டும் ஏற்படுவதற்கு இட மளிக்கக் கூடாது என்ற திடசித்தத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும். யதார்த்தத்துக்கு அமை வான அணுகுமுறையைப் பின்பற்றுவதே அதற்கான ஒரே வழி.
  thinakaran

0 commentaires :

Post a Comment