5/09/2010

இந்தோனேஷியாவில் பாரிய நில நடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

 

  இந்தோனேஷியாவின் வடக்கு சுமாத்ரா தீவில் இன்று காலை பாரிய நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரிச்டர் அளவில் இது 7.4 ஆகப் பதியப்பட்டுள்ளது.

நில நடுக்கம் தொடர்பான விபரங்களைத் தாம் தொடர்ந்து சேகரித்து வருவதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சேதவிபரங்கள் குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தோனேஷியாவில் நேற்றுக் காலை 8.52 மணியளவிலும் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. சும்பாவா பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள்அதிர்ந்தன.

நில நடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியிருந்தது. மக்கள் அச்சத்தால் வீடுகளிலிருந்து வெளியேறியிருந்தனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தத்தால் இந்தோனேஷியாவில்ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் அகதிகளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. ___

0 commentaires :

Post a Comment