5/08/2010

மக்கள் கதறல்களுக்கு மத்தியில் கொழும்பில் சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றம்

கொழும்பு 02 மலே வீதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புகளை இன்று பிற்பகல் கொழும்பு மாநகர சiபியினருடன் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அகற்றினர். அங்கு 20 குடியிருப்புகளில் வசித்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடியிருப்புகள் அகற்றப்படும்போது மக்கள் கண்ணீர் வடித்து கதறியழுததைக் காணக்கூடியதாக இருந்தது.

சட்டவிரோதமாக கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றுவதாக கொழும்பு மாநகர சபையினரால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் தங்குவதற்கான மாற்று ஏற்பாடுகளோ நிவாரணங்களோ வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள்  தெரிவித்தனர்.


0 commentaires :

Post a Comment