5/07/2010

சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கைக்கு பங்காளி அந்தஸ்த்து முக்கிய உடன்படிக்கைகளில் நேற்று இலங்கை கைச்சாத்து

நாட்டின் பாதுகாப்பு, நாணயமாற்று மற்றும் வீடமைப்பு உட்பட பல அம்சங்களை உள்ளடக்கிய முக்கிய உடன்படிக்கையொன்றில் அரசாங்கம் நேற்று கைச்சாத்திட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட இவ்வொப்பந்தக் கைச்சாத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் பங்கேற்றதாக அமைச்சர் தெரிவித்தார். சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இலங்கை பங்காளி அந்தஸ்தைப் ளிialog partnலீr பெற்றுள்ளதையடுத்தே இது சாத்தியமாகியுள்ளதென அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவிக்கையில் :-
சங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா பிரதான உறுப்பு நாடாகவுள்ளது. சுகாதார சீர்கேடுகளைத் தடுத்தல், கலாசார சீர்கேடுகளைத் தடுத்தல், அரச ஊழியர் வீடமைப்பு, மீனவர்கள் முன்னேற்றம், மின்சக்தித் துறை தொடர்பான அம்சங்களும் இவ்வுடன்படிக்கையில் அடங்குகின்றன.
அடுத்த வாரத்தில் நமது நாட்டுக்குச் சில பொருளாதார நன்மைகள் கிடைக்கவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெஹ்ரானில் ஜீ-15 மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஈரான் உட்பட முக்கிய அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
எமது உற்பத்திப் பொருளுக்கான சந்தை வாய்ப்பை அதிகரிக்கவும் நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தவும் இது பெரிதும் உதவும். இலங்கை 80 வீத கறுவாவை ஆர்ஜன்டீனா, வெனின்சுலா போன்ற நாடுகளுக்கே ஏற்றுமதி செய்கின்றது.
தெஹ்ரான் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இதற்கான வாய்ப்புக்களை மேலும் வலுப்படுத்தும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 

0 commentaires :

Post a Comment