5/06/2010

மட்டு பஸ் டிப்போவிற்கு முதல்வர் திடீர் விஜயம்.+

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வாகரையிலிருந்து மட்டக்களப்பு நேக்கி வருகை தந்து கொண்டிரக்கும் போது செங்கலடிச் சந்தியில் பஸ்சுக்காக சுமார் 35 பேர் அளவில் காத்துகொண்டிருந்தார்கள். இவர்களிடம் சென்று வினவியபோது செங்கலடிச் சந்தியிலிருந்து உன்னிச்சைக்கான போக்குவரத்த இடம்பெறவில்லை என அம்மக்கள் முதல்வரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து மட்டக்களப்பு இலங்கைப போக்குவரத்து சபை காரியாலயத்திற்கு உடனடியாக தொடர்பு கொண்டு அதற்குரிய பஸ் ஏற்பாட்டினை மேற்கொண்டார். பின்னர் திடீரென மட்டு பஸ் டிப்போவிற்கு சென்ற முதலமைச்சர் சந்திரகாந்தன் இது குறித்த உரிய அதிகாரிகளோடு பேசியதோடு, இவ்வாறான பயனிகள் சிரமத்துக்குள்ளாகின்ற விடயங்களை நிவர்த்தி செய்வது தொடர்பாக ஆராய நாளை (06.05.2010) விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு நிருவாகிகளுக்கு பணித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment