பிணையில் விடப்பட்டிருந்த ஊடகவியலா ளர் ஜே. எஸ். திஸ்ஸநாயகத்துக்கு உலக ஊடக சுதந்திர தினமான நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் ஜி. எல். பீரிஸ் நேற்று வெளி விவகார அமைச்சில் தனது அமைச்சுப் பொறுப்புகளை உத்தியோக பூர்வமாக கையேற்றுக் கொண்டார். அதனையடுத்து இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டி லேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத் துக்கு பொது மன்னிப்பு வழங்கியிருப்பதா கவும், ஊடக சுதந்திரம் பற்றி வெறும் வார்த்தைகளால் அன்றி செயற்பாட்டின் மூலம் அதனை ஜனாதிபதி உறுதிப்படுத்தி யுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் அங்கு குறிப்பிட்டார். ஊடகவியலாளர் சுதந்திரத்துடன் சம்பந் தப்பட்ட இந்த தினத்தன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட மேற்படி நடவடிக்கை உலக நாடுகளின் கெளரவத்தை பெற்றுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் மேலும் கூறினார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற் பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2008 மார்ச் 7 ஆம் திகதி ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனையை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வழங்கியது. ஊடகவியலாளர் ஜெயப்பிரகாஷ் திஸ்ஸநாயகம் 1964 இல் யாழ்ப்பாணத்தில் இணுவிலில் பிறந்தவர். கல்கிஸ்ஸ சென். தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பட்டதாரியாவார். 1987 இல் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் முதன் முதலாக ஊகவியலாளராக அறி முகம் பெற்ற சில காலத்தின் பின் அரச சார்பற்ற அமைப்புகளுடன் சேர்ந்து செயற்பட்டார். அவ்வாறான ஒரு அரச சார்பற்ற அமைப் பின் நிதியுதவியில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான சஞ்சிகையொன்றை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். |
5/04/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment