5/03/2010

ஐரோப்பிய வான்வெளிப் போக்குவரத்தை முடக்கிய ஐஸ்லாந்தின் எரிமலைப் புகை மூட்டம் சி. ஜெயபாரதன்,

2010 மார்ச் மாதம் 21ம் திகதி சுமார் 190 ஆண்டுகளாய் மூடிக்கொண்டிருந்த ஐஸ்லாந்தின் அயா-புல்லாய்ஹோகுல் எரிமலை வாய் திறந்து தீப்பொறிகளை வீசி எறியத் தொடங்கியது. அந்த எரிமலைக் குன்றின் வாய் பனிப்படிவு மேவியது.
வெளியேறிய கனற் பாறைக் குழம்பு பனிச்சிகரத்தை உருக்கி ஒரு பக்கம் நீர் ஆறாகவும், திரவப் பாறை வெள்ளமாகவும் ஓட ஆரம்பித்தது. எரிமலைத் தீப்பொறிகள் வெளியேறும் போது கலந்த நீராவி மேற்புறம் புகை மண்டலமாய் வீசத் தொங்கியது. மார்ச் 24ல் ஐஸ்லாந்து எரிமலை மற்றொரு வாயை திறந்து 980 அடி உயர (300மீ) எரிமலை வெடிப்பை உண்டாக்கியது.
புதிய எரிமலை வாய்த் திறப்பு மேலும் மற்ற எரிமலை இயக்கங் களைத் தூண்டி வன விலங்குகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று பூதளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்போது ஐஸ்லாந்தில் 35 மூச்சு விடும் எரிமலைகள் இயங்கி வருகின் றன. சென்ற எரிமலை வெடிப்பு அதே மலை முகட்டுப் பனிச் சிகரத்தில் 1821 ஆண்டில் மூண்டெழுந்து சுமார் இரண்டாண்டுகள் கனற் குழம்பையும் புகை மூட்டத்தையும் கொட்டி இருக்கிறது.
முதலில் திறந்த ஐஸ்லாந்து எரிமலை 200 அடி அகல வாயை உண்டாக்கியுள்ளது ஒரு கோணத்தில் எரிமலை நீராவிக் குழம்பைப் பார்த்தால் ஊற்றுப் போல் பீச்சும் மஞ்சள் நாடாவைப் போல் ஒளிக்காட்சி அளிக்கிறது.
2010 மார்ச் 21ல் எரிமலை வாயிலி ருந்து பேரளவு புகை மூட்டம் கிளம்ப ஆரம்பித்து ஐரோப்பிய ஆகாய விமானப் போக்குவரத்துகளை எதிர்பாராதவாறு நிறுத்த ஆரம்பித்தது! இம்முறை ஐஸ்லாந்தில் எழுந்த எரிமலை வெடிப்பு எத்தனை நாட்கள் இன்னும் நீடிக்கும் என்று யூகிக்க இயலாது என்று பூதளவியல் நிபுணர் கள் கூறுகிறார். எரிமலைக் காட்சியைக் காண முதல் பத்து நாட்களில் மட்டும் சுமார் 25,000 சுற்றுலா நபர்கள் விஜயம் செய்ததாக அறியப்படுகிறது.
பூர்வீகத்தில் பூகோளம் உண்டான விந்தை
4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே முகிற்கனல் துணுக்குகள் குளிர்ந்து ஓரண்டமாய் உருண்டு திரண்டது நமது பூகோளம். அண்ட வெளியில் விண்கற்கள் மோதி அடித்ததாலும், எழுந்த கதிரியக்கத் தேய்வுகளாலும் அது கனற் குழம்பாய் ஆகியது.
அதற்குப் பிறகும் குளிர்ந்து திணிவான பிண்டம், அடியே தங்கி அடுக்கடுக்காய் தோல்கள் கவசமாக மேவி, 8000 மைல் விட்டத்தில் நமது பூகோளம் தோன்றியது.
உள்ளே இன்னும் குளிர்ந்து கொண்டு வரும் பூமி, உட்கருவைக் கலக்கி வெப்பத் திரவத்தை மேல்தளத்துக்குத் தள்ளு கிறது. இந்த வெப்பச் சுற்றோட்டமே நிலநடுக்கங்களையும், எரிமலைகளை யும் உண்டாக்கக் காரணமாகிறது! ஹவாயி தீவான கிலெளயாவில் இவ்விதமே பல்லாயிரம் ஆண்டுகள் எரிமலைகள் குமுறி எழுந்து, அதன் பரப்பு விரிந்து கொண்டே வருகிறது.
ஆதி காலத்தில் நாம் வாழும் புவி யின் தளங்களும் கடற் குளங்களும் இவ்விதமே எரிமலைகளால் உருவாகி விரிந்தன என்று ஒருவாறு ஊகிக்கலாம்!
இயற்கைப் பழுதுகளால் அடிக்கடி ஏற்படும் பூகம்பங்கள், எரிமலைகள் பல்லாயிரம் மக்களை சில நாட்களுக் குள் கொன்று விடுகின்றன! கடந்த 500 ஆண்டுகளாக எரிமலைக் குமுறலில் 300,000 மேற்பட்ட மாந்தர் மாண்டுள்ளதாக உலக வரலாறுகள் மூலம் அறியப் படுகின்றது! இருபதாம் நூற்றாண்டில் மேற்கிந்தியத் தீவில் உள்ள பெலீ சிகரம் கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்னும் இரண்டு
இடங்களில் நேர்ந்த எரிமலைகளில் 50,000 க்கு மேலாக மாந்தர் உயிரிழந்துள்ளனர்! ஆதலால் பயங்கர எரிமலைகளின் திடீர் எழுச்சி கள், அவற்றின் போக்குகள், பிறகு ஓய்வுகள், மீண்டும் வரும் எழுச்சிகள் யாவும் விஞ்ஞானிகளால் தொடர்ந்து நோக்கப்பட்டு, அவை மீண்டும் தாக்க வரும் தருணங்கள் முன்னதாகவே மக்களுக்கு எச்சரிக்கப்பட வேண்டி யவை! “வான்வெளிப் பயணத்தின் தவிப்பு என்னவென்றால் எரிசாம்பல் புகை மூட்டத்தில் என்ன நச்சுத் துணுக்குகள் எதிர்ப்படும் என்பதை நாம் சொல்ல முடியாது! அப்போது தான் எவை பாதிப்பவை, எவை பாதுகாப்பானவை என்று உறுதியாகக் கூற முடியும்.
ஆகவே விமானப் பயணத்தை நிறுத்தி அனைத்தையும் தவிர்ப்பதே ஏற்புடையதாகும். சுமார் 30,000 அடி உயரத்தில் அரிக்கும் வாயுக்கள் எவ்விதம் தாறுமாறாய் நகரும் என்பது யாருக்கும் விளக்கமாகத் தெரியாது”
இதுவரை 38 மைல் நீட்சியில் எரிமலை முகட்டுக்குக் கிழக்கே எரிசாம்பல் பரவியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. வெடிப்புக்கு அருகில் வாழும் மாந்தருக்கு உடல்நலக் கேடுகள் விளையும். அந்தப் பகுதிக்கு அப்பால் மற்றவருக்குப் பேரளவு உடல்நலப் பாதிப்புகள் நேருமென்று நான் கருதவில்லை.
பொதுவாக புகை முகில் அளவும் எவ்வளவு தூரம் எரிசாம்பல் எறியப் படுகிறது என்பதுமே எத்தனை எடையளவு சாம்பல் சேர்ந்துள்ளது, எங்கு படிந்துள்ளது என்பதைத் தெரிவிக்கும்.
எரிமலைப் புகை மூட்டத்தால் ஏற்படும் உடல் நலக் கேடுகள் ஐஸ்லாந்து தீவில் மட்டும் இப்போது 35 எரிமலைகள் தீவிரமாய் மூச்சு விட்டுப் புகை ஊதிக் கொண்டிருக் கின்றன. தற்போதைய எரிமலைப் புகை பொழிவு பேரளவு நச்சுத் தூசி துணுக்குகளை வீசிப் பூமியில் வாழும் உயிரினத்துக்குப் பெருங்கேடு விளைவிக்கிறது.
ஐரோப்பாவில் பரவிய புகை மூட்டத்தால் உலக நாடுகளின் ஆகாய விமானப் போக்குவரத்துகள் தடைப்பட்டு ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தார்கள். உலக உடல்நலப் பேரவை ஐரோப்பாவில் வசிக்கும் மக்கள் தமது வீட்டுக்குள் அடங்கிக் கொள்ள வேண்டும் என்றும், எரிசாம்பல் விழும் போது மூக்குக் கவசம் அணிய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஞ்ஞானிகளுக்கு எரிமலைப் புகைச் சாம்பல் பூதளவியல் ஆராய்ச்சி செய்ய உதவுகின்றது. அதனில் நுண்ணியக் கண்ணாடி மணல், எரிமலைக் குழம்பு குளிர்ந்து அல்லது பாறை வெடிப்பில் கிளம்பிய தூசி மண்டலம் கலந்துள்ளது. அவற்றை மனிதர் சுவாசிப்பதால் மூக்கு, தொண் டையில் அரிப்பு ஏற்படும்.
கண்களில் எரிச்சல் உண்டாகும். நுண்துகள் காற்றுக் குழாய் வழியாக உள்ளே சென்று புப்புசங்களில் தங்கி கொண்டு, ஆஸ்த்மா, நீடித்த பிரான்கிடிஸ், எம்.பிkமா போன்ற சுவாச நோய்களைக் கடுமையாக்கி மூச்சு விடுவதில் சிரமத்தை உண்டாக்குகின்றன.
அடுத்து, வீட்டு விலங்குகளுக்கு ஆபத்துக்கள் விளைவிக்கும். பல்வேறு வகைப்பட்ட எரிமலைக் குழம்புக்கு ஏற்ப பல்விதமான இரசா யன நச்சுகள் வெளியேறுகின்றன. சில வகைப் புகை முகில்களில் புளோரின் வாயு மிதப்புகள் கிளம்பும். அவை படிந்த புல்லைத் தின்னும் போது கொல்லும் எலும்பு நோய் புளோ ரோஸிஸ் விலங்கினத்தைக் தாக்கும்.
தற்போதைய வரண்ட ஐஸ்லாந்து எரிமலைப் புகை முகிலில் ஏராளமான அளவு நச்சு மூலக புளோரின் கலந்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பு சில மாதங்கள் அல்லது சில வருடங் கள் கூட நீடிக்கலாம் என்று ஐஸ்லாந்து வரலாற்றை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். புகை மூட்டத்தில் சிறிதளவு ஸல்பராக் ஸைடு வாயுவும் கலந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஸல்-பர் அல்லது அதன் அமில இருப்பைக் காட்டும் முட்டை நாற்றம் அடித்தால் பொது மக்கள் வீதியில் உலவுவதைக் குறைத்து வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று அறிவுரை விடுவிக்கப்பட்டிருந்தது.
எரிமலை வெடிப்பின் போது பூமியைச் சுற்றிவரும் துணைக் கோள்கள் தூர உளவிக் கருவிகள் மூலம் புகை மூட்டத்தின் போக்கைப் படமெடுத்தனுப்பும் கலப்புத் துணுக்கு களை ஆய்ந்து காணும் துணைக் கோள்கள் மூலமாக இரசாயன ஆய்வுச் சோதனைகள் செய்ததில் எரிசாம்பலும், சூழ்வெளி வாயு மண்டலத்தில் எவ்விதம் கலந்து கொள்கின்றன வென்றும், புகை முகிலில் துணுக்குகள் இருப்பு எத்தனை நாட்கள் நீடிக்குமென்றும், அறிய முடிகிறது.
அத்துடன் புகை முகிலில் எப்படி இரசாயன மாறுதல் கள் ஏற்படுகின்றன என்பது சூழ்வெளிக் காலநிலையைக் கடந்த காலத்தில் எவ்விதம் பாதித்தது எதிர்காலத்தில் எப்படிப் பாதிக்கும் என்றறிய விஞ்ஞானிகள் புரியும் கணனி மாடலுக்கு உதவுகின்றது.
எரிமலைப் புகை மூட்டம் வான் வெளிப் போக்குவரத்தை முடக்கியது. நாளொன்றுக்கு ஐரோப்பாவில் இயங்கும் 29,000 விமானப் போக்குவரத்துக்களில் 10400 எண்ணிக்கை 5.3 மைல் உயரம் (8.5 கி.மீ) (28000 அடி) வரை ஏறிய ஐஸ்லாந்து எரிமலை மூட்டத்தில் நிறுத்தம் அடைந்து பயணிகள் பல நாட்கள் விமான நிலையத்தில் தவித் தனர். ஐரோப்பாவில் 16 அகில நாட்டு விமான தளங்கள் மூடப்பட்டன.
அதனால் விமானப் போக்குவரத்து வணிகம் நாளொன்றுக்கு 200 மில்லி யன் டொலர் நிதி வரவை இழந்ததாக அறியப்படுகின்றது. 2010 ஏப்ரல் 17ல் புகை மூட்டத்தின் திசைமாறி திணிவும் குன்றி சில விமானப் பயணங்கள் தொடங்க ஆரம்பித்தன. புகை முகிலில் கிளம்பும் பாறைச் சாம்பல், காண்ணடி மணல் விமானங்களின் ஜெட் எஞ்சினுக்குள் புகுந்து துளை களை அடைத்துச் சுழற்தட்டுகளில் ஓட்டத்தை நிறுத்தி விடலாம் என்ற அச்சம் விமான ஓட்டுநருக்கு உண் டாகிறது. இதற்கு முன்பு இந்தோனே ஸியா எரிமலைப் புகை மூட்டத்தில் பறந்த ஒரு விமானத்துக்கு எஞ்சின் கள் நிறுத்தம் அடைந்து தொல்லை கொடுத்துள்ளது.
எரிமலைக் குழம்பால் விளையும் பெருந் தீமைகள்
திடீரெனப் புகை மண்டலம் எழுந்து, வெடித்துக் கனல் ஆற்றைப் பெருக் கும் எரிமலை ஒரு நாட்டின் சூழ்வெளி, நீர்வளம், நிலவளம், காலநிலை, நிதி வளம் ஆகியவற்றை ஒரே சமயத்தில் பெருத்த அளவில் பாதிக்க வல்லமை பெற்றது.
அத்துடன் எரிமலை வாயுவில் கணிசமாக வெளிவரும் ஸல்பர்டை யாக்சைடு, சிறு துணுக்குகளில் வீசப் படும் மெர்குரி, ஆர்ஸெனிக் நச்சுகள் உயிரினங்களுக்கும், பயிரினங்களுக்கும் நீண்ட கால நோய் நொடிகளைத் திணிப்பதுடன், முடிவில் மரணத்தை யும் கொடுக்கும் கொடூரமுடையது.

எரிமலை வெடிப்புகள்
அண்டையில் வாழும் எண்ணற்ற மக்களைப் புலம்பெயர வைக்கும். குடியிருக்கும் எண்ணற்ற வீடுகளை எரித்தோ, சாம்பலால் மூடியோ இல் லாமல் செய்துவிடும். எரிமலை வாயுச் சிதறல்கள் குழம்புக் காய்வுகள் நாட்டின் தொழிற்சாலைகள், போக்குவரத்துக்கள், மின்சாரப் பரிமாற்றுக் கம்பங்கள் ஆகியவற்றை நாசமாக்கிவிடும்.
ஹவாயியின் பிரதான இயக்க எரி மலைகள் மெளன லோவா, கிலெளயா ஆகிய இரண்டும் தொடர்ந்து வெளி யேற்றும் குழம்பால் அபாயம் நேர்வ துடன் நீர்ச் சிதைவு, நிலச் சிதைவு, பெருத்த பொருள் நட்டமும் ஏற்படு கின்றன! 1997 ல் அமெரிக்கப் புவியி யற் பரப்புக் கண்காணிப்புத் துறைய கம் வெளியிட்ட எரிமலை மற்றும் நிலநடுக்க அபாயங்கள் பின்வருமாறு;
1. எரிமலைக் குழம்பு ஆறோட்டங்களால் ஏற்படும் தீ விபத்துகள்.
2. காற்றில் கலக்கும் எரிமலைத் துணுக்குகளின் சிதறல்கள்
3. எரிமலைகள் வெளியேற்றும் விஷ வாயுக்கள்.
4. வெடிப்புக் கொப்புளிக்கும் கற்சாம்பல் வீச்சுகள்.
5. பூதளப் பிளவுகள், பிளவுப் படிவுகள் உண்டாக்கும் தீங்குகள்.
6. எரிமலைக் குழம்பு ஓடிக் கடலில் பாயும் போது எழும் வெடிப்புகள்.
எரிமலை வாயுக் கொப்புளிப்புகளில் முக்கியமாக இருக்கும் விஷவாயுக்கள் இரண்டு; ஸல்-பர்டையாக்சைடு, கார்பன்டையாக்சைடு  [SO2, Co2] கிலெளயா எரிமலை நாளொன்றுக்கு 2000 டன் ஸல்பார்டையாக்சைடு,(SO2) மூச்சரிப்பு வாயுவை வெளி யேற்றுகிறது!
அதன் எடையளவைக் குறிப்பிட்டால், சுமார் 50 திமிங்கில எண்ணிக்கைக்கு ஒப்பிடலாம்! வாயுக் களின் சதவீத அளவைச் சுவாசிக்கும் காற்றில் காண, எரிமலைக்கு அருகில் மாதிரி எடுக்கச் செல்லும் விஞ்ஞானி கள் ‘சுவாசிப்புக் கவசம்’ அணியாது சென்றால் இருமலும், மூச்சடைப்பும் மிகுந்து சில நிமிடங்களில் மயக்கமுற்று, அவரது மூச்சு நின்று போய்விடும்! அத்துடன் மிகச் சிறிதளவில் கொடிய நஞ்சுகளான மெர்குரி, ஆர்செனிக் உலோகங்களும் வெளியேறுகின்றன!
 

0 commentaires :

Post a Comment