5/07/2010

எல்லைக்கிராமமான வடமுனை பிரதேதச அபிவிருத்திக்கு முதலமைச்சரினால் 75 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசசதுரை சந்திரகாந்தன் தனது நிதியில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாக இருக்கின்ற கல்லிச்சை வடமுனைக் கிராமத்திற்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு முதற்கட்டமாக 75 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கியுள்ளார். போரினாலும் வன் செயல்களினாலும் அதிகமாக பாதிப்படைந்த இவ் எல்லைக் கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகி இருக்கின்றார்கள். மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற இம் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைத் தாம் தொடர்ந்து மேற்கொள்ள இருப்பதாகவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
img_0934

0 commentaires :

Post a Comment