5/07/2010

வாகரை பஸ் டிப்போவிற்கு 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசசதுரை சந்திரகாந்தன் தனது விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாகரைப் பிரதேசத்தின் அனைத்த துறைகளையும் அபிவிருத்தி செய்வதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருகின்றார். இதன் ஒரு கட்டமாக 75 மில்லியன் ரூபாய் நிதியினை வாகரைப்பிரதேச அபிவிருத்திக்கு முழுமையாக ஒதுக்கியுள்ளார். இதில் விசேடமாக இலங்கைப் பேக்குவரத்து சேவையின் வாகரை டிப்பேவிற்கான நிர்வாகக் கட்டிடம் மற்றும் சுற்றுமதில் அமைப்பதற்காக 4மில்லியன் ரூபாவினை முதல் கட்டமாக ஒதுக்கியுள்ளார். இது தொடர்பான அபிவிருத்தி ஆய்வுக் குழு கூட்டம் நேற்று வாகரை பிரதேசத்தில் முதலமைச்சர் தலைமையில் இடம்பெற்றத இதில் முதலமைச்சரின் செயலாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 commentaires :

Post a Comment