5/06/2010

தொண்டா, கெஹலிய, எஸ்.பி., திஸ்ஸ 4 அமைச்சர்கள், 6 பிரதியமைச்சர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் களாக நால்வரும், பிரதியமைச்சர்களாக ஆறு பேரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட னர். ஜனாதிபதி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களினதும், பிரதியமைச்சர்களினதும் விபரம் வருமாறு: மைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
ஆறுமுகன் தொண்டமான் - கால்நடை மற்றும் கிராமிய சமூக மேம்பாட்டு துறை அமைச்சு.
பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண - தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி துறை அமைச்சு.
கெஹலிய ரம்புக்வெல்ல - வெகுஜன ஊடக மற்றும் தகவல் துறை அமைச்சு.
எஸ். பி. திஸாநாயக்க - உயர் கல்வி அமைச்சு.
பிரதியமைச்சர்கள்
கலாநிதி சரத் அமுனுகம - நிதி, திட்டமிடல் பிரதியமைச்சர்.
கலாநிதி மேர்வின் சில்வா - நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர்.
மஹிந்தானந்த அளுத்கமகே - இளைஞர் விவகார பிரதியமைச்சர்
பைசர் முஸ்தபா - சுற்றாடல் துறை பிரதியமைச்சர்.
எம். கே. டி. எஸ். குணவர்தன - புத்தசாசன, மற்றும் மதவிவகார பிரதியமைச்சர்.
கலாநிதி ஜகத் பாலசூரிய - தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாட்டுத் துறை பிரதியமைச்சர்.

0 commentaires :

Post a Comment