கடந்த 01.05.2010 மேதினமன்று மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை .
இம் மாநகரத்தில் பேருந்து நிலைய கல் நாட்டும் விழாவிற்கு தலைமை தாங்கி நடாத்துகின்ற மட்டக்களப்பு மாவட்ட மேயர் சிவகீத்தா பிரபாகரன் அவர்களுக்கும், இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைத்து மதப் பெரியார்களுக்கும், மாகாணசபை உறுப்பினர்களான கௌரவத்திற்குரிய துரைரெட்ணம், கிருஸ்னாணந்தராஜா, பூ.பிரசாந்தன், மாசிலாமணி ஐயா அவர்களுக்கும், மாநகர சபை அரசியல் உறுப்பினர்களுக்கும், அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளருக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்கும், ஊடகவியலாளர்களுக்கும், ஏனைய பிரமுகர்களுக்கும், கட்டட ஒப்பந்த காரர்க்கும் அனைவருக்கும் வணக்கம்.
இந்த அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இது பாட்டாளி புரம் என்பதனாலும், இன்று பாட்டாளி தினம் என்பதனாலும் இந்த முக்கியத்தவம் வாய்ந்த நாளில் பஸ் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்ற மகிழ்ச்சியான செய்தியோடு இந்த மட்டக்களப்பு மாநகரிலே பல்வேறு தரப்பட்ட அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் இவ்வேளையிலே, இன்று மட்டக்களப்பிலே பேருந்து நிலையம் மிக அழகாக, ஏனைய மாகாணத்திலிருக்கும் பஸ் பேருந்து நிலையத்தை ஒத்த பேருந்து தரிப்பிடம் ஒன்றை இங்கு எதிர்வரும் பத்தாம் மாதம் திறந்து வைக்கப்படும் என்ற நம்பிக்கை. அந்த காட்சியை நாமும் கண்டு கழிப்போம் என்ற சந்தோசமான நாளிலே இங்கு அமர்ந்திருக்கும் மட்டக்களப்பு வாழ் பெருமக்கள் ஒருவிடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றால் அக்குழந்தையை அழகுபடுத்த வேண்டும், படிப்பிக்க வேண்டும் என்றெல்லாம் இருப்போம். அதே போன்றுதான் இந்த மட்டக்களப்பு மாவட்டம் மீன் மகள், வாவி மகள் என்று பேர் வாங்கிய இம் மாவட்டம் ஒரு அழகான மாவட்டமாக வரவேண்டும் எனறு பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது. உண்மையிலே இது ஒரு அழகான மாநகரம். ஏதிர்காலத்தில் இதன் எழிச்சியோடு இதன் அடையாளங்களை காப்பாற்றிக்கொண்டு அழகு பெற வேண்டும் என்ற பெரு முயற்சி எனக்கு மாத்திரம் அல்ல அனைவருக்கும் இருக்கின்றது அதன் வெளிப்பாட்டு தன்மை மிகக் குறைவாக இருக்கின்றது என்பது அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அந்த அடிப்படையில் கடந்த காலங்களில் முடிந்த அனைத்து பணிகளையும் செய்வதற்கு முன்வரவேண்டும். இந்த பேருந்து நிலையம் என்பது முன்னரும் அடிக்கல் நாட்டி கட்டப்பட்டிருந்தது. நான் நினைக்கின்றேன் 1979ம் ஆண்டு ராஜம் செல்வநாயகம் இருந்த காலப்பகுதியிலே இப்பொழுது அம்பாறை மாவட்டத்தில் இருக்கின்ற அமைச்சரான தயா என்கின்ற அவர்களால் அடிக்கல் நாட்டி கட்டப்பட்டதாக கதை கூறுகின்றது. இருந்தும் அந்த நேரத்திலே இருந்த பணவசதிக்கும், அந்த நேரத்தில் இருந்த தொழில் வசதிக்கும் ஏற்றவாறு அமைத்திருக்கின்றார்கள். அவர்கள் அந்த நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டம் அழகு பெற வேண்டும் என்ற முயற்சிக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும். தற்போது இருக்கின்ற நவீன உலகத்தில் எங்களது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதில் இந்த திட்டம் மிக நீண்ட காலமாக இந்த மட்டக்களப்பை நலன் விரும்பிகள் ஊடாகவும், மக்கள் ஊடாகவும் இதைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதிகளிலே நாங்கள் நிச்சயமாக செய்து கொடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்த பொழுது இதனை மாகாண கட்டிட பொறியியலாளர் வேல்மாணிக்கம் மூலம் இதனை படமாக்கி இருந்தோம். படங்களை வரைந்த பின் அதற்குரிய பணத்தினை பெற்றுக் கொள்ள மிக சிரமமாக இருந்தது. மாகாண சபையிலும், மாநகர சபையிலும் பணம் இல்லாத காரணத்தினால் இங்கு இயங்கிக் கொண்டிருந்த வடக்கு கிழக்கு கரையோர அபிவிரத்தி திட்டத்திற்குள் உள்வாங்கிய பொழுது இத்திட்டம் முடிவடையும் காலப்பகுதியில் இருப்பதால் இதனை எடுக்க முடியாது என்று கூறியிருந்தார்கள். இருந்தாலும் இது ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதி என்பதனால் இதனை ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஸவிடம் கூறியிருந்தபோது இதை உடனடியாக செய்து தருவேன் என கூறினார். இத்தி;ட்டம் முடிந்தாலும் விசேட நிதியின் மூலம் இதனை செய்து தருவதாக கூறிவிட்டு, 10 நிமிடம் கழித்து எனக்கு போன் பண்னி P.னு குறூஸ் அவர்களை பேசச் சொல்லி இருந்தார். நான் குறூஸ் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் மன்னார் மாவட்டத்திலே இருப்பதாக கூறியிருந்தார். நான் அவரிடம் கூறியிருந்தேன், பசில் ராஜபக்ஸ உடனடியாக பேச சொல்லியிருக்கிறார். கட்டிடம் சம்மந்தமாக பேச இருக்கிறார். மட்டக்களப்பு மாநகரம் சம்மந்தமாக 08 கோடி ரூபாய் கட்டடம் சம்மந்தமாக பேசுவார் அதை செய்துகொடுக்க அனுமதியை பெற்றுக்கொள்ளுங்கள் என கேட்டிருந்தேன் அவர் பேசியதன் அடிப்படையில் அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. நாம் பசில் ராஜபக்ஸவிற்கு நன்றி கூற வேண்டும் இங்கு பிறக்காமல் இருந்தாலும் மட்டக்களப்பு மாநகரம் அழகாக வரவேண்டும் இங்கும் மீனினங்கள் மிக அழகான தங்கநகைகளிட்டு அழகான சேலைகளோடும் இருக்கவேண்டும் என்ற ஒரு அர்ப்பணிப்போடு செயற்படுகின்ற பணிப்பாளர் குரூஸ் அவர்களுக்கும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் சாமித்தம்பி ஐயா அவர்களுக்கும் மிக நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன் எனினும் இந்ததிட்டம் அமுலாகி இருக்கின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் இது முழுமை பெற்று அனைவரும் எதிர்பார்த்த கட்டிடமாக பத்தாம் மாதம் திறப்பதற்கு வழிவகை செய்யவேண்டிய பொறுப்பு எமது ஒப்பந்தகாரரான மட்டக்களப்பு அழகுபெற நினைக்கின்ற ஒப்பந்தகாரரான ஆஞ்சநேயர் ஐயாவே காரணம் என நினைக்கின்றேன் நாங்கள் பலதரப்பட்ட அபிவிருத்தி முயற்சி எடுத்திருந்தாலும் எமது மக்கள் எதிர்பார்த்த அளவு அபிவிருத்திப்பணிகள் நடக்கவில்லை என்பதை உரைக்க முடிகின்றது மாநகரசபை உறுப்பினர்கள் மிக அக்கறை எடுக்கவேண்டும் நான் இரவு கொழும்பிலிருந்து வந்தபோது ஓட்டமாவடி பாலம் தாண்ட எல்லாப்பகுதிகளிலும் மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. மட்டக்களப்பிற்குள் வந்ததும் அரசடி கோவில் தாண்டியதும் எந்தவித மின்குமிழ்களும் இல்லை. இந்தபாதையில் மாத்திரம் ஐந்தாறு மின்குமிழ்கள் இருந்தது இதையெல்லாம் நடைமுறைப்படுத்த உள்நாட்டு உதவியோ வெளிநாட்டு உதவியோ அல்லது மாகாணசபை உதவியோ தேவையில்லை இங்கிருக்கின்ற மாநகரசபையே இங்கிருந்து எடுக்கின்ற வரிப்பணத்தில் செய்யமுடியும.; இதற்கு வேறு பணம் தேவையில்லை. இங்கிருக்கின்ற மாநகரசபையை இயக்குபவரும் வர்த்தகர்களும் இப்பகுதியை வெளிச்சமுள்ள பகுதியாக ஆக்கலாம். இந்த சிறிய விடயத்தை கூட செய்யமுடியாமல் இருப்பதை விட்டு மனவருத்தம் அடைகிறோம். இங்கு வேலை செய்கின்றவர்கள் ஆகக்குறைந்தது ஒருமாத சம்பளத்தை கொடுத்தாவது ஒரு பத்து மில்லியன் ரூபாவில் இந்த மட்டக்களப்பு மாநகரத்தை மின்குமிழ் ப+ட்டி அழகபடுத்தலாம் என நினைக்கின்றேன.; இருந்தாலும் தேர்தல் காலத்தில் எனது சம்பளத்தை எமது பிரதிமேயர் ஜோர்ஜ்பிள்ளை அவர்களிடம் கொடுத்திருந்தேன் அவர்; அந்த பணத்தில்;தான் இப்பாதையில மின்விளக்கு எரிந்ததாக கூறியிருந்தார் நான் இதை குற்றம் கூறுவதாக கூறவில்லை. அனைவரும் அபிவிருத்தி, அபிவிருத்தி என்ற கூறுவோம் செய்யக்கூடிய விடயத்தை நாம் செய்வதில்லை எங்கிருந்தோ வரும் பிரச்சினைகளையும் யாரையாவது பிரச்சினைக்கு இழுப்பதையும் விட்டுவிட்டு நடைமுறை சாத்தியமான எங்களது பகுதியை துப்பரவாக அழகாக வைத்து கொள்ளக்கூடிய எங்களால் முடிந்த முயற்சிகளில் இறங்கவேண்டும். இங்கு வந்திருக்கின்றவர்கள் புத்திஜீவிகளும் மாவட்டத்தை வடிவமைக்கக்கூடியவர்களும் எதிர்காலத்தில் அபிவிருத்தி சார்ந்த , அரசியல் ரீதியான வழிகளில் இட்டுசெல்லக்கூடியவர்களும் என்ற வகையில் பேசுகின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு சந்தோசப்படுகின்றேன். இங்கு எடுத்துக்கொண்டால் இதுவும் பாட்டாளிபுரம் என்று கூறுவார்கள். இந்த பாட்டாளிபுரம் என்பது பாட்டாளி வர்க்கத்தினர் கடந்தகாலங்களில் இந்த பேரூந்து நிலையம் அமைப்பதற்கு முன்னர்கூட பாட்டாளி வர்க்கத்தினர் உழைத்து கழைத்து இந்தப்பகுதியில்தான் வந்து மது அருந்துவதாக, நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறுவார்கள் இந்த பாட்டாளி தினம் என்பது அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட தினமாக இருந்தாலும் அதற்கு உலகளவில் விடுமுறை கொடுக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர்கள் 18 மணித்தியாலமாக வேலை வாங்கப்படுவதாகவும், அதனை 8 மணித்தியாலமாக குறைத்து போராட்டம் நடத்தப்பட்டு அதில் உயிர்நீத்தவர்களுக்காக அர்ப்பணிப்புடன் மடிந்தவர்கள் வெற்றியீட்டியதன் காரணமாக கொண்டாடப்படுகின்றது. இது அப்போது அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாற்றம் இப்போது இங்கே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை கொண்டாடாவிட்டாலும் பத்திரிகை அல்லது இந்த சந்தர்ப்பத்தில் பேச வாய்ப்பு கிடைத்திருக்கின்றது
எமது பகுதியில் இருக்கும் தொழிலாளர் பிரச்சினைகள் வருமானம் குறைந்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் இந்த தொழிலாளர் தினத்தை மறக்கமுடியாத நாளாக நான் பார்க்கிறேன் எனது தனிப்பட்ட வாழ்விலே 1993ம் ஆண்டு தொழிலாளர் தினத்தன்று என்னால் மறக்கமுடியாது நான் முதல் தடவையாக விடுதலை போராட்டத்தில் இருந்தபொழுது யாழ்ப்பாணதத்pற்கு சென்றிருந்தேன் 1993ம் ஆண்டு இத்தினத்திலே புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்க வாய்ப்புக் கிடைத்திருந்தது. ஆகையால் அந்த நாளை மறக்கமுடியாது. அந்தநாளில் முக்கிய தளபதியாக இருந்து இன்று இங்கு முரண்பட்ட அரசியலும் செய்துகொண்டிருக்கும் முரளிதரன் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருந்தது. அதுமட்டுமல்ல அன்றுதான் எமது முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பிறேமதாஸ அவர்களும் கரும்புலிகளால் வெடித்து கொல்லப்பட்ட தினம் என்ற அடிப்படையிலே எங்களது தனிப்பட்ட வாழ்வில் மறக்கமுடியாத நாளாக பார்க்கின்றேன் அந்தவகையில் இந்தகட்டடமும் என்னால் கல் நட்டப்பட்டு நினைவில் அழியாத நாளாக பார்க்கின்றேன். எங்கோ இருந்து பிரச்சினைகளுக்கு எடுக்கப்பட்ட முடிவுகள் யாருக்காகவோ எங்கோ எடுக்கப்பட்ட முடிவுக்கு கொண்டாட்டம் நடாத்துவதும் எங்களது பிரச்சினைகளை முடிப்பதற்கு முடிவுகளை எடுக்காத சமூகமாக இருப்பதை எங்களால் அவதானிக்கமுடிகின்றது. குறிப்பாக நாங்கள் கடந்த தேர்தலிலே கொண்டாட்ட நாளாக கொள்ளலாம் என்ற அடிப்படையில் மாகாணத்தை வலுப்படுத்தவும் ஆளுமைப்படுத்த மாகாணசபைக்கு ஆணை தாருங்கள் என்று பொதுமக்களிடம் ஆணை கேட்டு நின்றோம் நீங்கள் மாறாக எங்களுக்கு வாக்களிக்காமல் வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் எமது மக்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்லக்கூடிய வாய்ப்பினை நீங்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றீர்கள். அதற்கான விளைவையும் வாக்களித்த மக்கள் அனுபவிக்க போகின்றீர்கள் காரணம் என்னவென்றால் மத்தியில் அமைந்திருக்கின்ற அரசாங்கம் மிகப்பலமான அரசாங்கமாக அமைந்திருக்கின்றது ஏனென்றால் தமிழர்கள் தமிழ்த்தேசியம் பேசினார்கள் சிங்களவர்ககள் சிங்கள தேசியம் பேசினார்கள் இதன்காரணமாக சிங்களவர்கள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்து இருக்கின்றார்கள் முக்கியமான விடயங்களை அவர்கள் அமுல்படுத்தபோகின்றார்கள். ஒரு உதாரணத்தை உங்களுக்கு நான் சுட்டி காட்டவேண்டும். கடந்தமுறை உள்ள+ராட்சி மறுசீரமைப்பு சட்டமூலம் கிழக்குமாகாணசபைக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது இந்த வட்டார முறையை கொண்டுவருவதற்கும் சிறுபான்மை மக்கள் சிறிதாக பிரிந்து வாழ்கின்ற பகுதிகளில் வட்டாரமாக பிரிந்து சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு கொண்டுவரப்பட்ட சட்டமூலமாகும். இதை கிழக்குமாகாணசபை திருப்பி அனுப்பியிருந்தது மீண்டும் அந்த சட்டமூலத்தை அமுலாக்கி தாருங்கள் என்று என்னிடம் கேட்டிருந்தார்கள் கடந்த ஒன்பதாம் திகதிக்கு முன்னர் இருந்த முதலமைச்சர் வேறு இப்பொழுது இருக்கின்ற முதலமைச்சர் வேறு என்பதை நான் மட்டக்களப்பான் என்ற வகையில் நான் கூறியே ஆகவேண்டும். அன்று நான் திருப்பி அனுப்பிய மகஜரை இன்று அமுலாக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன். இதன் காரணமாக வட்டாரமுறை கொண்டுவரப்பபடும் பின்னர் தேர்தல் மாற்றங்கள் கொண்டுவரப்படும் அதன் பின்னர் இன்னும் கணிசமான மாற்றங்கள் கொண்டுவரப்படும். இதை எதிர்ப்பதற்கு எமது மக்கள் எம்மை வலு இல்லாதவர்களாக தள்ளி அனுப்பியிருக்கின்றார்கள் இது வேதனைக்குரிய விடயம் இங்கு வாக்களித்து 14 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைத்திருக்கின்றார்கள் இவர்கள் கூறிய வடக்கு கிழக்கு இணைக்கமுடியுமா? இணைத்து தருவார்களா? இதைத்தான் இவர்கள் 50 வருடகாலமாக பெற்றுத்தந்திருக்கின்றார்கள். என்னத்தை கிழித்திருக்கின்றார்கள்? எதையுமே அவர்கள் செய்யவில்லை. இதில் நீங்கள் மீண்டும் மீண்டும் பிழைகளை விட்டுவிட்டு எமது சமூகத்தின் தலைவிதிகளை கையில் இருக்கின்ற விடயங்களைக் கூட இழக்கின்ற சமூகமாக ஆகப்போகின்ற எமது மக்கள்தான் இதற்கு பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளவேண்டும். கடந்தகாலத்தில் நீங்கள் அளித்த வாக்குகளுக்காக பணி செய்யவேண்டிய மாகாணத்தை பாதுகாத்து கொடுக்கவேண்டிய பொறுப்பு மாத்திரம் எனக்களித்திருக்கின்றது. அதற்காக நான் பணி செய்வேன் ஏனென்றால் காலம் காலமாக இந்த விடுதலைப்போராட்டம் வளரவேண்டும் தனித்தமிழீழம் எங்களுக்கு தேவையென்று சொல்லிவிட்டு 1976ம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்கள் இரத்தத்தை கீறி பொட்டுவைத்து பிரகடனத்தை செய்துவிட்டு 1977ம் ஆண்டு எதிர்க்கட்சியில் அமர்ந்து சபாநாயகருக்கு முன்னால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் வாழ்வோம் என சத்தியப்பிரமாணம் எடுத்தவர்கள் இன்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகளை பேசுவோம் என்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வோம் என்றால் எமது மாகாணம் வலுப்பெற வேண்டும் எமது சமூகம் வளம்பெற வேண்டும் என்றுதான் ஒரு அரசியல்வாதி சிந்திக்கவேண்டும் அன்று மாற்றுக்கருத்ததுக்களை வேறு வீராப்பு கதைகளையும் பேசிக்கொண்டு இன்னமும் செல்லமுடியாது எனினும் அவர்களை பேசிக்குற்றமில்லை இன்னமம் கடந்தகால வரலாறுகள் தெரியாமல் அவர்கள் மீண்டும் தேர்தலில் வாக்கெடுக்கவும் அவர்களின் ஆசனங்களை வைத்துக்கொண்டிருப்பதற்காகவும் அவர்கள் அரசியலுக்கு வந்தவர்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும் மாறாக நாங்கள் அப்படியல்ல அடுத்தமுறை ஆட்சிக்கு வரவேண்டும் உழைத்துவிட்டு நாங்கள் கொழும்பில் வீடு வாங்கவேண்டும் என்ற கட்சியுமில்லை. முழுக்க முழுக்க எமது சமூகதத்pற்கு பணிசெய்ய வேண்டும் எமது சமூகத்திற்காக உயிர்கொடுக்கவேண்டும் என்ற மாற்று அரசியலுக்காகவும் கிழக்குமாகாணத்தில் ஒரு ஜனநாயத்தை கொண்டுவரவேண்டும் என்பதற்காக நாங்கள் அரசியலுக்கு வந்தவர்கள் என்பது அந்த உண்மையை விளங்கிகொள்ளவில்லை என்ற கவலை எங்களுக்குள் புதைந்திருக்கின்றது கடந்தகால தேர்தலில் ஏன் நீங்கள் அரசாங்கத்தோடு சேரவில்லை என்று கேட்டிருந்தார்கள் நாங்கள் அரசாங்கத்தோடு வெற்றிலை சின்னத்தில் கேட்டிருந்தால் இந்த முதலமைச்சர் ஆசனத்தை பெற்றுக்கொண்டோம் இல்லையென்று கூறவில்லை இந்த தேர்தலில் வெற்றிலையில் கேட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை சிந்திக்கவேண்டும் மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கும் மகிழ்ச்சியான விடயம் கொழும்பை பொறுத்தவரைக்கும். இந்த கிழக்குமாகாணசபை உருவாக்கப்பட்டு கட்டியெழுப்பட்ட சமூக நல்லுறவு சமூக இணக்கப்பாடெல்லாம் குலைந்திருக்கும் என்ற உண்மையை நீங்கள’; விளங்கிகொள்ளவேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் கேட்டிருந்தால் மட்டக்களப்பில் ஒருகாலமும் நடக்காத நிகழ்வு நடந்திருக்கும் எங்களது வாக்கை வைத்து வந்திருக்கும் ஹிஸ்புல்லா அங்க அமீர் அலி ஏறாவூரில் அலிஸாகிர் மௌலானா வந்திருப்பார்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் பசீர் சேகுதாவூத் வந்திருப்பார் ஒருகாலத்திலும் நடக்காத நிகழ்வு நடந்து நான்கு முஸ்லிம் எம்பிக்கள் வந்திருப்பார்கள் எங்களுக்கும் எந்தவிதமான பிரச்சினையுமில்லை சமூகம் அடிபட்டிருக்கும் காரணம் என்ன நூறுவீத மக்களில் இருபத்தைந்துவீத முஸ்லிம்களும் எழுபத்தைந்துவீத தமிழர்களும் வாழ்கின்றார்கள். காலத்தால் நடக்காத தவறை இங்கு வந்திருக்கும் முதலமைச்சரோ தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளோ விடக்கூடாது என்பதற்காக நாங்கள் தனித்துவமாக நின்றோம் முஸ்லிம் வேறு அரசியல் வேற என்று கூறவில்லை இனத்துவேசம் பேசவில்லை உரிமையென்னும்போது ஒரு சமூக உரிமையை பாதுகாக்கும் விடயம் ஒரு அரசியல்வாதிக்குள்ளது. சமூகம் சார்ந்த அரசியல் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்கின்ற அடிப்படையில் அரசியல் செய்தோம் என்ற உண்மையை விளங்கிக்கொள்ளவேண்டும் கடந்தகாலத்தில் மட்டக்களப்பு மக்கள் பெரும்பிழை விட்டார்கள் யாழ்மக்கள் ஆளும் கட்சியில் மூன்றுபேரை அனுப்பியிருக்கின்றார்கள். பாராளுமன்றம் சென்று கூச்சலிடவும் ஆட்கள் அனுப்பியிருக்கின்றார்கள். கூச்சலிடுபவர்கள் கூச்சலிட்டுக்கொண்டு இருப்பார்கள் இங்க வந்திருக்கின்ற யோகேஸ்வரன் ஐயா என்ன செய்யப்போகின்றார் இங்கு வந்திருக்கின்ற அரியநேத்திரன் என்ன செய்யப்போகின்றார் கடந்தமுறை பாராளுமன்றம் வந்திருந்தார் இந்தமுறையும் வந்திருக்கின்றார் அவர் சாகும்வரை அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என நினைக்கின்றேன் ஆகையால் இங்கு சுயநிர்ணய உரிமையையோ வடக்கு கிழக்க இணைப்பையோ செய்து தரமுடியாது அரசாங்கம் அவர்களை கூப்பிட்டுபேச எந்தவிதமான அருகதையும் இல்லாதவர்கள் என்பதையும் நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். கடந்தகாலங்களைப்போல் இன்னமும் சிங்கள பேரினவாதம் என்று பேசிப்பேசி இருக்கின்றவர்கள் பின்னால் இழுபட்டால் நாங்கள் இருக்கின்றோமா இல்லையோ என்று தெரியாது இருக்கின்றதையும் இழந்த சமூகமாக இருக்கின்றதையும் இல்லாமல் தொலைத்த சமூகமாக மீண்டும் மாவட்ட அட்சிமுறையை கொண்டு திணித்த சமூகமாக மாறுவீர்கள் என்ற உண்மையை சொல்லி எதிர்காலத்தில் நடந்த தவறுகளை மறந்து உண்மையான அரசியல் தெளிவுள்ள சமூகமாக மாறவேண்டும் அரசியல் ரீதியாக நீங்கள் சிந்திக்கவேண்டும் மாறாக எங்கிருந்தோ எழுகின்ற வடபகுதியை மாத்திரம் தலைமைத்துவங்களை வைத்துக்கொள்கின்ற பத்திரிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பின்னால் இழுபட்டு நீங்கள் அழியக்கூடாது. உங்களது பிரச்சினை உங்களது சமூகப்பிரச்சனை உங்களுக்கும் பிரச்சினை என்ற ஆழமான அரசியல்பார்வை உள்ள அரசியல் சமூகமாக மாறவேண்டும் என்று வண்மையாக கேட்டுக்கொண்டு இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த அனைவருக்கும் நன்றிகூறி முடிக்கின்றேன் நன்றி வணக்கம் .
0 commentaires :
Post a Comment