தங்கதுரை பழிவாங்கப்பட்ட கதை…
தமது தலைமைப் பதவிக்கு போட்டியாக இருந்த இராதுரையை எப்படி ஓரங்கட்ட அமிர்தலிங்கம் சதிதிட்டம் தீட்டினாரோ அதோ போல் இராசதுரையுடன் இணைந்து (கல்விதரப்படுத்தலை போன்ற பிரச்சனைகளில்) தமது யாழ் அடிப்படைவாத சிந்தனை போக்குகளுக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்ற தங்கதுரையையும் ஒதுக்கி விடும் திட்டம் அவர் மனதிலிருந்தது. 1970 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக்கட்சி பெரும் து}ண்களான அமிர்தலிங்கம் (வட்டுக்கோட்டை தொகுதி)இ சிவசிதம்பரம் (நல்லு}ர்த் தொகுதி) போன்றோர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தனர். அதேபோன்று வவுனியாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழ் காங்கிரசின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த தா.சிவசிதம்பரமும் தனது ஆசனத்தை 1970 ஆண்டு தேர்தலில் இழந்திருந்தார்.
பல முனைகளிலும் தோல்விகளால் துவண்டிருந்த தமிழரசுகட்சியும்இ தமிழ் காங்கிரசும் தமது கடந்தகால பகைகளை மறந்து வாக்குப் பொறுக்கி அரசியலுக்காக ஒன்று சேர்ந்தமையே த.வி.கூட்டணி பிரசவமாகும். இந்த நிலையில் அடுத்து வரும் தேர்தலில் இந்த கூட்டணியினரிடத்தில் தொகுதி பங்கீடு பற்றிய பிரச்சனை எழுந்த போது அதில் வவுனியா தொகுதியை இட்டு முறுகல் நிலை உருவானது. வவுனியாவை இருசாராரும் விட்டுக் கொடுக்க தயாராக விருக்கவில்லை. இந்த நிலையில் தான் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூது}ர் தொகுதியில் சிங்கவர்கள் அதிகமாக வாழும் பிரதேசமான சேருவலையை மையமாக கொண்டு ஒரு தொகுதியை உருவாக்க அரசும் திட்டமிட்டு வந்தது.
வவுனியாவில் தமது தமிழரசு கட்சி பிரதிநிதித்துவத்தை விட்டு கொடுக்க விரும்பாத அமிர்தலிங்கம் அந்த தொகுதியின் முக்கியஸ்தரும் தமிழ்காங்கிரசின் பிரதிநிதியுமான தா.சிவசிதம்பரம்த்திற்காக முல்லைதீவினை அடிப்படையாக கொண்டு ஒரு புதிய தொகுதியை உருவாக்கும் எண்ணத்தோடு அரசை அணுகினார். இந்த நேரத்தில் தான் முல்லைதீவு தொகுதியை கொடுத்து சேருவலையை பெற்றுக் கொள்ளும் சிறிமா அரசாங்கத்தின் திட்டம் இரகசியமாக அமிர்தலிங்கத்தின் ஒப்புதலுடன் அமூலாகியது. கிழக்கு மாகாணத்தில் சிங்கள விவசாயிகள் குடியேற்றப்பட்ட பொழுதுகளில் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்ட யாழ்ப்பாணத் தலைவர்கள் ஒரு புதிய தொகுதி சிங்களவர்களுக்காக கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்டு சட்ட அங்கீகாரம் பெறப்பட்ட வேளைகளில் ஏன் வாய் திறவாதிருந்தனர் என்பதன் காரணம் இதுதான். இவர்கள் ஒருபோதும் கிழக்குமாகாண மக்களின் வளமான வாழ்வினை ஆராதிக்கவில்லை. அவர்களை வைத்து பிழைப்பு நடத்தவே முயன்றனர். அதற்காகவே தமிழ் தலைவர்கள் என்கின்ற போலி முகம்களைக் காட்டி நாடகம் ஆடினர். அமிர்தலிங்கம் போன்றோர் கிழக்கு மண்ணை காக்க வந்தவர்கள் என்பதல்ல விற்றுத் தின்றவர்கள் என்பதே உண்மையாகும்.
1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூது}ரில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஏ.எல்.அப்துல் மஜித் அவர்களும் தமிழரசுக் கட்சி சார்பில் தங்கத்துரை அவர்களும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தனர். ஆனால் அமிர்தலிங்கத்தின் ஆசியுடன் சேருவலைத் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர் மூது}ரிலும் சேருவலையிலுமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இரு தொகுதிகளிலும் சிறுபான்மையாக்கப்பட்டு தமது அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்ய முடியாதவண்ணம் அரசியல் அனாதைகாளக்கப்பட்டனர்.
அந்த இரு தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட முடியாது போனதன் காரணமாக தங்கத்துரை அவர்களுக்கு அரசியலில் அஞ்ஞாதவாசமே கிடைத்தது. ஆனாலும் திருகோணமலையில் போட்டி போடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டும் என பல த.வி.கூட்டணிக் கிளையினரும் கேட்டுக் கொண்ட போதும் அதற்கு எதிர்மாறான முடிவுகளையே கட்சியின் தலைமை வடக்கில் இருந்;து பிறப்பித்தது. அமிர்தலிங்கத்தின் விருப்பத்திற்கேற்ப 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் திருகோணமலையின் த.வி.கூட்டணி வேட்பாளராக இரா.சம்பந்தன் நிறுத்தப்பட்டார்.
தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கி அமிர்தலிங்கம் ஒரேகல்லில் இரண்டு மாங்காய்கள் அல்ல மூன்று என விழுத்திக் காட்டினார். ஒன்று சேருவலைத் தொகுதி சிங்களவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இரண்டுஇ வவுனியாத் தொகுதி தமிழரசுக் கட்சிக்காக பாதுகாக்கப்பட்டது. மூன்றுஇ முல்லைத்தீவு தொகுதி தமிழ் காங்கிரசுக்காக உருவாக்கப்பட்டது. அதேவேளை கல்லு வீழந்ததோ கிழக்கு மாகாணத்தான் தலையில். பறிபோனது சேருவலைப் பிரதேசம். மட்டக்களப்பான் மடையன் அல்ல மாங்காய் மடையன் என்று அன்று அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மனதுக்குள் சிரித்திருக்கக் கூடும். ஆனல் இன்றும் இனிமேலும் அது பழங்கதையாய் பொய்யாகிப் போகும் என்பதே திண்ணம்.
0 commentaires :
Post a Comment