தாய்லாந்தில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களிலீடுபட்டுள்ள சிவப்பு சட்டை அணியினர் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தினர். இதில் மூன்று பேர் பலியானதுடன் 70 பேர்வரைக் காயமடைந்தனர். அரசுக்காதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தை நோக்கியே இக்கைக் குண்டுத்தாக்குதல் நடத்தப் பட்டது. ஐந்து குண்டுகள் வீசப்பட்டன. மூவர் பலியாகினர். 70 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் வெளிநாட்டினரும் உள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஆதரவாளர்கள் கடந்த நான்கு வாரங்களாக பிரதமர் அபிஷித் வெஜ் ஜாஜி தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். இதனால் தலைநகர் பாங்கொக்கில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசுக்காதரவான ஆர்ப்பாட்ட மொன்று வியாழக்கிழமை நடை பெற்றது.
இதை நோக்கி சிவப்பு அட்டை அணியினர் ஐந்து கைக்குண்டு களை வீசினர். இதையடுத்து தாய்லாந் தில் பதற்றம் அதிகரித்துள்ளது. பொலி ஸார். இராணுவத்தினர் வரவழைக்கப் பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன. காயமடைந்த வெளிநாட்டினரில் ஜப்பான், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தோரும் அடங்குவர். நிலைமைகள் மோசமடைந்து செல்வதையுணர்ந்த ஐ.நா.வும் அமெரிக்காவும் இருதரப்பினரையும் அமைதி காக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது. அமைதியை நிலைநாட்ட அரசாங்கம் ஆயத்தமாகி யுள்ளது.
0 commentaires :
Post a Comment