4/05/2010

இனியபாரதி , பாணியில் அடிதடியில் ஈடுபட்டுள்ள்ள கணேசமூர்த்தி.

கிழக்கு மாகாணம் எங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவுத்தளம் பெருகிவருவதையடுத்து, எதிரணி வேட்பாளர்கள் அனைவரும் கதிகலங்கியுள்ளனர். கிராமம் கிராமமாக ரி. எம் .வி பி தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் களமிறங்கி ஆதரவைத் திரட்டி வருகின்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வெற்றிலைச் சின்ன வேட்பாளர்பளின் தோல்வி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக ரி எம் வி பி தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் தாக்கும் நடவடிக்கைகளில் அம்பாரையில் இனிய பாரதியும் மட்டக்களப்பில் கணேசமூர்த்தி, சத்தியவரதன் குழுவினரும் களமிறங்கியுள்ளனர். கடந்த வாரம் சித்தாண்டி 4ம் வட்டாரத்தில் உள்ள ரி எம் பி வி ஆதரவாளர் யோகா என்கின்ற பெண்மணிமீது தாக்குதல் நடாத்தி அவரது வீட்டிற்கும் பாரிய சேதம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை சித்தாண்டிப் பிரதேச வெற்றிலைச் சின்ன வேட்பாளர் சத்தியவரதன் குழுவினரே செய்திருந்தாதாக அறிய முடிகிறது. விசேடமாக இதில் வரதன் குழுவின் தலைவர் செந்தில்நாதன் என்றழைக்கப்படும் செந்தில் என்பவரே இதனைச் செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதே போல் கடந்த 02ந் திகதி அம்பாரை மாவட்டத்தின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதன்மை வேட்பாளர் சத்தியசீலனின் முன்னணி ஆதரவாளர்கள் சிலர்; பாரதி குழுவினரால் தாக்குதலுக்குள்ளாகி படு காயமடைந்துள்ளார்கள்.
நேற்று( 03ந்திகதி ) இரவு மட்டக்களப்பு கல்லடியில் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டிருந்த ரி எம் வி பி தொண்டர் வினோத் என்பவர், கணேசமூர்த்தி குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளர். அவருடன் சென்ற தமிழ் அலை பதிப்பகத்தின  பணிப்பாளர் கோபியின் மோட்டார் சைக்கிளும் சேதத்திற்குள்ளாக்கப்பட்ள்ளது. இச் செய்தியினை அறிந்த கிழக்கு மானகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு நேரடியாக அவ்விடம் சென்றதனால் கடத்தி வைக்கப்பட்டிருந்த வினோத் எனும் இளைஞனை மீடக முடிந்தது. இச் சம்பவதத்தினை   கணேசமூர்த்தியின் கையாளாகச் செயற்படுகின்ற முனைக்காட்டைச் சேர்ந்த அகிலேஸ்வரன் ஆசிரியர்  என்பவரே நேரடியாகச் செய்துள்ளார். அது மட்டுமல்ல கடத்திச் செல்லப்பட்டவர் கல்லடியில் அமைந்துள்ள கணேசமூர்த்தியின் வீட்டினுள் கொண்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளார். கணேசமூhத்;தியின் தம்பி ஒருவரும் இவ் அடாவடித்தனங்;களில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் ஆயுதம் தூக்கிய  போராளிகள் எல்லாம் வன்முறைகளைக் கைவிட்டு ஜனநாயக அரசியலில் ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில் படித்தவர்கள்  பட்டம் பெற்றவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற கணேசமூர்த்தி ,சத்தியவரதன் , அகிலேஸ்வரன் போன்றவர்கள் இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இடுபட்டிருப்பது பற்றி மட்டக்களப்பு மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

0 commentaires :

Post a Comment