4/03/2010

அம்பாரை மாவட்ட தமிழர் மகாசபை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு முழு ஆதரவு.


img_7180இன்று காரைதீல் இடம்பெற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு தமது ஆதரவினை முழுமையாக வழங்க முன்வந்துள்ளார்கள். காரைதீவை மையமாகாக் கொணடியங்கும் தமிழர் மகாசபை, விபுலானந்தர் நினைவுப் பணிமன்றம், விவேகானந்தர் சபை, விளையாட்டுக்கழகங்கள் , மாதர்சங்கங்கள் மற்றும் கிராமத்தின் பொது அமைப்புக்கள் அனைத்தும்; முழுமையான ஆதரவினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கே வழங்குவதென  உறுதியான முடிவினை எடுத்துள்ளார்கள். அங்கு உரையாற்றிய உதவிக் கல்விப்பணிப்பாளரும் பத்திரிகையாளரும், விபுலானந்தர் நினைவுப் பணிமன்றத்தின் தலைவரும் தமிழர் மகாசபை முக்கியஸ்த்தருமாகிய சகாதேவராஜா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்தான் எமது மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றக் கூடியவர்கள் என்றும் எமது மாவட்ட மக்ள் அனைவரும் படகுச் சின்னத்தையே ஆதரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.img_7286

0 commentaires :

Post a Comment