தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒவ்வொரு கட்சியும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் பெரிய கல்லாற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நடை பெற்றது. இதனை பெரிய கல்லாறு சங்கங்கள், மன்றங்கள், பொது அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
இப் பிரச்சாரக் குட்டத்துக்கு கிழக்கு மாகான முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் . தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்ரர். கிழக்கு மாகான சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் சிவகுணம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்கள் வீ. ஆர். மகேந்திரன், எஸ். ஆர். மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரிய கல்லாற்றை பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா (நவம்) தமிழரசுக் கட்சியின் தலைமை வேட்பாளராகப் போட்டி இடுகின்றார் என்பது இங்கே குரிப்பிடப்படப் பட வேண்டிய விடயம் . இருந்த போதிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் இந்த பிரச்சாரக் கூட்டத்துக்கு பெருமக்ளவான பொது மக்கள் கலந்து கொண்டனர். குட்டமைப்பின் தலைமை வேட்பாளரது ஊரிலேயே கூட்டமைப்புக்கு ஆதரவு இல்லை என்பது இதன் முலம் அறியக் குடியதாக இருந்தது.
கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அக் கூட்டத்திலே ஆற்றிய உரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வீர வசனங்கள் பேசிப் பேசியே தமிழ் மக்களை உசுப்பேத்தி தாங்கள் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் மக்களை ஏமாற்றி கிழக்கு மாகான அபிவிருத்தியிலே தடையாக இருக்கின்றவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைத்துவங்களே
இன்று தமிழர்களை படு குழியில் தள்ளியவர்களும் இந்த குட்டமைப்பினரே. மீண்டும் மக்களை ஏமாற்றி தாம் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காக மக்களிடம் வீர வசனம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் மக்கள் இவர்களின் வார்த்தை ஜாலங்களை நம்பிவிடக் கூடாது. தமிழர்கள் அதிலும் கிழக்கு மாகான தமிழர்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது.
இன்று கிழக்கு மாகாணத்திலே ஒரு தலைமை உருவாகி இருக்கின்றது. கிழக்கு மாகான சபை மூலம் எமது பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன எமது மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகான மக்களின் நெருப்பிலே குளிர் காய நினைக்கும் வடக்குத் தலைமைகள் கிழக்கு மாகான சபையை ஏற்றுக் கொள்ளவில்லை கிழக்கு மாகான சபையினையும் இல்லாது ஒழிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அதிகம் விதவைகளை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் அதிகம் உள்ள மாவட்டம் மட்டக்களப்பு இந்த நிலை எதனால் வந்தது? இதற்கு யார் காரணம்? இதற்கு முழுக் காரணமுமே இந்த கூட்டமைப்பினரும் வடக்கு தலமைகளுமே.
மாற்றுக் கருத்துடையோர்களை கொலை செய்யக் காரணமாக இருந்தவர்களும் இவர்களே. தமிழ் வீரம் பேசிப் பேசியே மட்டக்களப்பு மக்களை பலிக்கடாவாக்கும் இந்த கூட்டமைப்பினர் வடக்கு மக்களுக்காக மட்டுமே குரல் கொடுக்கின்றனர். மட்டக்களப்பு மக்கள் குடும்பம், குடும்பமாக சுடப் படுகின்றபோது குரல் கொடுத்தார்களா?
கிழக்கிலே ஒரு தலைமைத்துவம் உருவாக வேண்டும் புறக்கணிக்கப்படும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்று நாம் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து வந்த போது வன்னிப் புலிகளால் படைஎடுக்கப்பட்டு எமது இளைஞர்கள் பலர் கொலை செய்யப் பட்டபோது கொலைகளை நிறுத்தி இருக்கலாம்தானே.
தமிழர்களை படு குழியில் தள்ளியவர்கள் இந்த கூட்டமைப்பினரும் வன்னித் தலமைகளுமே. மீண்டும் மட்டக்களப்பு மக்களை பலிக்கடாவாக்கும் முயற்சியிலே கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரும் அவரோடு சார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது என்று பேசியதோடு தமிழர்களை படுகுழியில் தள்ளி தமிழர்களின் அழிவுக்கு காரணமானவர்கள் இந்த கூட்டமைப்பினரே இதை இல்லை என்று மறுப்பார்களானால் மட்டக்களப்பு மாவட்ட கூட்டமைப்பு தலைமை வேட்பாளர் தன்னுடன் நேரடியான பகிரங்க விவாதத்துக்கு வந்து தாங்கள் தமிழர்களின் அழிவுக்கு காரணம் இல்லை என்று சொல்லட்டும் என்று சவால் விடுத்தார்.
shanthru
0 commentaires :
Post a Comment