4/17/2010

பாசிக்குடா அபிவிருத்திப்பணிகள் முதலமைச்சரினால் முன்னெடுப்பு

கிழக்கின் உல்லாசபுரியாக விளங்குகின்ற பாசிக்குடா கடற்கரையினை அழகுபடுத்தி அபிவிருத்தி செய்வது தொடர்பான திட்டம் தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உல்லாசதுறை அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் முன்னெடுக்கப்படுகின்றத. அதன் முதற்கட்டமாக 2.5கோடி ரூபா செலவிலான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடக்கப்படுகின்றது.
வாகன தரிப்பிட வசதி, உடை மாற்றும் அறை, பொது மலசல கூட வசதி, கடைத்தொகுதி அமைத்தல் போன்றவற்றுக்காக இத்தொகை செலவிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அபிவிருத்தி முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக இன்று நேரடியாக பாசிக்குடா கடற்கரைக்கு சென்ற முதலமைச்சர் அங்குள்ள இட அமைப்பீடு தொடர்பாகவும் ஆராய்ந்ததுடன் அபிவிருத்தி வேலைகளை உடன் ஆரம்பிப்பதற்குமான நடவடிக்கையினை மேற்கொண்டார்.

பாசிக்குடா கடற்கரையினை இன்று வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர் தலைமையில் துப்பரவு செய்யும் பணி நடைபெற்றத கடற்கரையில் ஊழியர்கள் துப்பரவுப்பணியில் ஈடுபடுவதையும் அவர்களோடு கிழக்கு மாகாண முதலமைச்சரும் துப்பரவு பணியில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.

0 commentaires :

Post a Comment