4/11/2010

அம்பாறை பிரதிநிதித்துவம்

 
அம்பாறை பிரதேசம்
அம்பாறை பிரதேசம்
இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டம் என கருதப்படும் அம்பாறை மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும் போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அங்கு இம்முறை 4 இலிருந்து 3 ஆகக் குறைந்துள்ளது.
இதேவேளை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 இலிருந்து 3 ஆக உயர்ந்துள்ளது.
ஃபேரியல் அஷ்ரப் தோல்வி
ஃபேரியல் அஷ்ரப்
ஃபேரியல் அஷ்ரப்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பில் வேட்பாளர்களாக 5 முஸ்லிம்கள், 4 சிங்களவர்கள் மற்றும் ஒரு தமிழர் என 10 பேர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சிவில் பாதுகாப்பு குழு பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி சிறியானி விஜயவிக்கிரம, அமைச்சர் பீ.தயாரத்ன ஆகியோருடன் அமைச்சர் ஏ.எல். அதாவுல்லா விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரி்வாகியுள்ளார்.
இக்கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஃபேரியல் அஷ்ரப் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவுசாத் மஜீத் ஆகியோர் தெரிவாகவில்லை.
த.தே.கூட்டமைப்பில் பியசேன தெரிவு
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 முஸ்லிம்கள் 4 சிங்களவர்கள் ஒரு தமிழர் என ஐக்கிய தேசியக் கட்சியினால் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர்களில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் எச்.எம். ஹாரிஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஆகியோர் தெரிவாகியுள்னர்.
பொடியப்பு பியசேன (த.தே.கூ)
பொடியப்பு பியசேன (த.தே.கூ)
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் பொடியப்பு பியசேன இம் முறை தெரிவாகியுள்ள அதேவேளை அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன் டாக்டர் தோமஸ் வில்லியம் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
 

0 commentaires :

Post a Comment