4/24/2010

மட்டக்களப்பானுக்கு யாழ்ப்பாணத்தில் என்ன வேலை –தமிழ் அரசு கட்சி உறுப்பினர் தியாகராஜா

மட்டக்களப்பில் இருந்து சென்ற வர்த்தகக் குழுவினர் தாம் உடுத்திருந்த உடுப்புடன் இன்று பஸ்ஏறி மாவட்டத்திற்கு திரும்பியிருக்கிறார்கள்
யாழ்ப்பாணத்தில்-ராஜா, வவுனியாவில்- சாந்தி, திருகோணமலையில்- சரஸ்வதி, மட்டக்களப்பு கல்லடியில்- சாந்தி ஆகிய திரையரங்குகளின் உரிமையாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்த்தருமான தியாகராஜா என்பவரின் குண்டர்களால் மட்டக்களப்பில் இருந்து வர்த்தக நோக்கத்திற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த செல்லம் குருப் ஒப் கம்hனியின் உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் ஊழியர்களைத்தாக்கி விரட்டப்பட்டனர். நீங்கள் அனைவரும் மட்டக்களப்பர்கள் இங்கு உங்களுக்கு என்ன வேலை எனவும் தகாத வார்த்தைகளால் பேசியும் ஆயுதம் தரித்த மர்ம நபர்களால் இவர்கள் விரட்டப்பட்டுள்ளனர். இவற்றிக்கெல்லாம் சூத்திரதாரி தமிழ் தேசிய கூட்டமைபு கட்சியின் முக்கியஸ்த்தரும் திரையரங்குகளின் உரிமையாளருமான தியாகராஜா என்பவரென அறிய முடிகின்றது.
   மட்டக்களப்பில் இருந்து சென்ற வர்த்தக குழுவினர் யாழ்ப்பாணத்திலுள்ள மனோகரா என்கின்ற திரையரங்கினை குத்தகைக்கு எடுத்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே சென்றிருந்தார்கள். இவர் குறித்த அத்தியட்டரின் புணர்நிர்மான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போதே மேற்படி மெரட்டல் மற்றும் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருக்கின்றது. உடனே மட்டக்களப்பில் இருந்து சென்ற வர்த்தகக் குழுவினர் தாம் உடுத்திருந்த உடுப்புடன் இன்று பஸ்ஏறி மாவட்டத்திற்கு திரும்பியிருக்கிறார்கள்.
    சமாதான சூழலில் இதுபோன்ற பிரதேசவாத மோதல்கள் இடம்பெறுவது மனவேதனையளிக்கின்றது. இதைப்போன்ற விடையங்களை மட்டக்களப்பில் மேற்கொள் நேரிட்டால் வர்த்தக செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்படும். எனவே இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிடின் தேவையற்ற பிரதேச வாத பிரச்சினைகள் உருவாவதற்கு இவ்வாறான செயல்கள் வழிவகுக்கும்.

0 commentaires :

Post a Comment