இத்தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். மலேசிய விமானம் தரையிறங்கிய போது, அதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி விசாரணை நடத்தினர். விசாரணையில் வந்திருப்பது பிரபாகரனின் தாயார்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. தனக்குப் பக்கவாத நோய் இருப்பதாகவும், அதற்குச் சிகிச்சை பெறுவதற்காகவே சென்னை வந்ததாகவும் அதிகாரிகளிடம் பார்வதிஅம்மாள் கூறினார். "இந்தியாவுக்குள் நுழைவதற்குத் தங்களுக்கு அனுமதி இல்லை. எனவே, நீங்கள் திரும்பிச் சென்றே தீரவேண்டும்" என்று அதிகாரிகள் .தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, வந்த விமானத்திலேயே பார்வதிஅம்மாளும், அவருடன் வந்த பெண்ணும் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள் என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார். |
4/18/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment