தேர்தல் என்றால் இந்த அரசியல்வாதிக்கெல்லாம் எங்கிருந்துதான் இந்த ஐடியாவெல்லாம் வருதோ தெரியல்லடா சாமி. ஒருத்தன் சொல்றான் கிழக்குமாகாணத்தை சிங்கப்புர் ஆக்குவேன் என்று, இன்னொருத்தன் சொல்கிறான் ஆனையாக்குவேன், ப+னையாக்குவேன் என்று இப்படி ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு திருகுதாளம்போட்டு மக்களை ஏமாற்றுகிறாங்கடா சாமி. இப்ப இருக்கிற எம்மட மக்களுக்கு அதெல்லாம் ரொம்ப பழகிப்போச்சு. அதுகளும் தாறதெல்லாம் வாங்கிட்டு தமிழனுக்குத்தான் ஓட்டுப்போடுவன் என்று சொல்லுதுகள். இதில கடும் வேடிக்கை என்னவென்றால் எமது மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களுக்கு படையெடுக்கும் சகோதர இனத்தைச்சேர்ந்த அரசியல்வாதிகள், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், கிராமிய அபிவிருத்தி சங்கங்களுக்கு சிறு சிறு பண உதவிகளும், கோயில்களுக்கு ஒலி பெருக்கிகளும் என வாரி வழங்குகின்றார்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது கட்சியின் சின்னம் , அவர்களது புகைப்படம், அவர்களது வெறற்p இலக்கம் பொறித்த ரீ-சேட்கள், நெருப்புப்பெட்டி, தொப்பி என தமிழ் சகோதர்களுக்கு வழங்கி வருகின்றார்கள். அவர்கள் கொடுக்கிறதெல்லாம் இந்த சனம் என்ன வாங்காமலா இருக்கப்போகுது. எல்லாத்தையும் நல்லா வாங்கித்து, தமிழனுக்கு ஓட்டுப்போடுவம் என்று சொல்லுதாம் இந்த சனங்கள்.
பாருங்கள் இவர்கள் எங்கட மக்களை ஏமாற்றி ஏமாற்றி பழகி இப்பவும் ஏமாற்றப்பார்க்கிறார்களே! இதுதான் உண்மையில் வேடிக்கை. ஏன் என்றால் இப்ப நம்மட தமிழ் மக்கள் சார்பாக நிறையப்பேர் போட்டியிடுறதால இவங்கட இந்த விளையாட்டு சரிப்படாது போல எனக்குத்தோணுது. இது ஒருபுறம் இருக்கட்டும் இப்ப ஆட்சியில இருக்கிற ஒருசில அமைச்சர்கள் தாங்கள் இந்தக்காலத்திலைதான் கட்டிடங்களை திறக்கிறாங்களாம். எது எப்படியோ எங்கட மக்கள் இந்தமுறை மிகவும் உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் யாருக்கு தங்களது வாக்குகளை செலுத்துவது என சரிபார்ப்பம் என்ன நடக்கப்போகுது என்று. நான் நினைக்கின்றேன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சின்னமான படகுக்குத்தான் வாக்களிக்க நிறையப்பேர் காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
க.குஞ்சித்தம்பி
கல்லடி.
0 commentaires :
Post a Comment