சூடான் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகவிருந்த நிலையில் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளிவர இன்னும் காலதாமதமாகலாம். வாக்கு எண்ணும் பணிகள் இறுக்கமடைந்துள்ளதே இதற்கான காரணமென தேர்தல் ஆணையகம் அறிவித்தது. இதற்கிடையில் பிரதான எதிர்க்கட்சி சூடான் அரசாங்கம் வாக்குகளைக் களவாட எண்ணியுள்ளது இதனால் மேலதிக இராணுவங்களை அனுப்பி வீணான பதற்றத்தை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே என்பன தேர்தல் ஆணையகம் பக்கச் சார்பின்றி முடிவுகளை வெளியிட வேண்டும் எனக் கேட்டுள்ளது. வன்முறைகள், பயமுறுத்தல்கள், அச்சுறுத்தல்கள் இடம் பெற்றுள்ளதால் இத்தேர்லை நேர்மையானதெனக் கூற முடியாதென தேர்தலைக் கண்காணித்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந் நிலையில் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கால தாமதம் ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமை சூடானில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் ஜனாதிபதி, எம். பி.க்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் டர்புர் பிராந்தியத்துக்கான சுய ஆட்சி அனுமதி என்பவற்றுக்கான ஆணையைக் கோரி ஒருவாரத்துக்கு முன்னர் தேர்தல் நடந்தது. முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இரண்டு தினங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் பின்போடப்பட்டன. ஜனாதிபதி ஓமர் அல்பஷிர் வெற்றி பெறுவார் எனப் பெரும்பாலானோர் எதிர்பார்க்கும் நிலையில் வெளிநாடுகள், எதிர்க்கட்சிகள் என்பன முடிவுகள் முறித்த சந்தேகங்களை தெரிவித்துள்ளன. 1986 ம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறை சூடானில் தேர்தல் நடந்தது. பிரதான எதிர்க்கட்சியான எஸ். எல். பி. எம். போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இக் கட்சியே முடிவுகள் பற்றிச் சந்தேகங்களையும் வெளியிட்டுள்ளது. சூடானின் டர்புர் பிராந்தியம் 2003 ஆம் ஆண்டிலிருந்து வன்முறையைச் சந்தித்த வண்ணமுள்ளது. இதில் இலட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்தும், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்போரை நடத்திய விதம் குறித்து ஜனாதிபதி ஒமர் அல் பஷிர் மீது சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதனால் தேர்தல் முடிவுகளை மேற்கு நாடுகள் ஆவலுடன் எதிர்பார் க்கின்றன. |
4/21/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment