4/29/2010

பனாமாவின் முன்னாள் இராணுவ தளபதி பிரான்ஸ¤க்கு நாடு கடத்தப்பட்டார்

பனாமாவின் முன்னாள் இராணுவத் தளபதி மானுவல் நொரிஜியா பிரான்ஸ¤க்கு நாடு கடத்தப்பட்டார். 1989ம் ஆண்டு அமெரிக்காவின் தலையீட்டினால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு இரண்டு தசாப்தகாலமாக அமெரிக்காவின் காலடியிலிருந்தார். நிதி மோசடி சம்பந்தமாக பிரான்ஸின் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படவுள்ளார்.
அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளின்டன் மானுவல் நொரிஜியாவை நாடு கடத்துவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்ட பின்னர் இவர் அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ¤க்கு நாடு கடத்தப்பட்டார். பிரான்ஸின் விமானத்தில் அந்நாட்டு வீரர்களின் பாதுகாப்பில் மானுவல் நொரிஜா நாடு கடத்தப்பட்டார். இதுபற்றி அவர் மகள் கூறியதாவது-
இது சிறை கைதிகளுக்குள்ள உரிமைகளை மீறும் விடயம். மனித உரிமைகளுக்கும் எதிரானது. எவ்வித அறிவித்தலுமின்றி ஒருவரை நாடு கடத்துவது ஜெனீவா உடன்படிக் கைக்கெதிரானதென்றும் கூறினார். இந்நிலையில் பிரான்ஸ¤க்கு நாடு கடத்தப்பட்ட மனுவல் நொரிஜியாவை பனாமாவுக்கு அனுப்பி வைப்பதற்கான அழுத்தங்களை முன்னெடுக்கப் போவதாக பனாமா தெரிவித்தது

0 commentaires :

Post a Comment