நேபாள அரசுக்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டத்தையும் வேலை நிறுத் தத்தையும் ஏற்பாடு செய்துள்ள மாவோயிஸ்டுகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மே மாதம் 1ம், 2ம் திகதிகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசைப் பதவி விலகி ஆட்சியை தங்களிடம் ஒப்ப டைக்கும்படி கோரியே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் நேபா ளின் எதிர்க்கட்சியில் உள்ளனர். இதன் தலைவராக புஷ்ப கமால் டால் உள்ளார்.
பாராளுமன்றத்தில் ஆகக் கூடுத லான ஆசனங்களை மாவோயி ஸ்டுகள் கொண்டுள் ளனர். 2006ம் ஆண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த இவர்கள் 2009ம் ஆண்டுவரை அரசாங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்தனர். அரசி யலமைப்பை மாற்றல், முன்னாள் மாவோயிஸ்ட் போராளிகளை அரசாங்க இராணுவத்துடன் இணை த்தல் போன்ற விடயங்கள் தொடர் பாக ஜனாதிபதியுடன் முரண்பாடு ஏற்பட்டதால் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் இராஜி னாமாச் செய்து எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டனர்.
நேபாளின் சட்ட அறிஞர்கள் அரசி யலமைப்பை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மே 28ம் திகதிக்கிடையில் இப் பணியை பூர்த்தி செய்ய வேண்டி யுள்ள நிலையிலுள்ளனர். தற்போது முகாம்களிலுள்ள இருபதாயிரம் முன்னாள் மாவோயிஸ்ட் போராளி களின் எதிர்காலம் குறித்தும் அரசியலமைப்பில் அம்சங்கள் சேர்க் கப்படவுள்ளன.
0 commentaires :
Post a Comment