கொலம்பியாவின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைக் குழப்பும் வகையில் வெனிசூலா நடந்து கொள்வதாக கொலம்பியாவில் இம்மாதம் 30ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால் பிரசாரப் பணிகள் சூடுபிடித்துள்ளன. இத் தேர்தலில் அல்வரோ யுரையின் கட்சி சார்பாகப் போட்டியிடும் கொலம்பியா வின் பாதுகாப்பு அமைச்சர் மானுவல் சன்ரோ வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இவ்வாறுள்ள நிலையில் வெனிசூலா ஜனாதிபதி ஹிகோபு சாவெஸ் இத்தேர்தல் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. கொலம்பியாவில் புதிய ஜனாதிபதி தெரிவானதால் வெனிசூலா, கொலம்பிய உறவுகள் நல்ல நிலைக்குச் செல்லும் மாறாக அல்வரோ யுரையின் வேட்பாளர் வெற்றி பெற்றால் மீண்டும் பதற்றமும் சந்தேகமும் இரு நாடுகளிடையே ஏற்படுமென வெனிசூலா ஜனாதிபதி எச்சரித்தார். இதை வைத்துக் கொண்டே கொலம் பியாவின் ஜனாதிபதி அல்வரோயுரைப் வெனிசூலாவை குற்றம்சாட்டியுள்ளார். வாக்காளர்களை அச்சுறுத்தும் பாணியிலும் தேர்தலைக் குழப்பும் நோக்குடனும் சாவெஸ் இக்கருத்துக் களைத் தெரிவித்ததாக அல்வரோயுரை குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே கொலம்பியாவின் போராளிகளை வெனிசூலா வளர்ப்பதாகவும் அல்வரோயுரைப் குற்றம்சாட்டியிருந்தார். |
4/29/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment