4/27/2010

மக்களுக்காகவே அரசியல் மாறாக மாலைகளுக்காக அல்ல,-கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்

தமிழ் பேசும் மக்களின் நியாயமான அபிலாசைகளை நிறைவேற்றி அவர்களின் எதிர்காலம் சுபீட்சமாக அமைவதன் மூலமே இலங்கையின் நிரந்தர அபிவிருத்தி ஏற்படும். அதற்கான தருணமும் 7வது நாடாளுமன்றத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. கடந்தகால தலைமைகளைப்போல் வெறும் வாய்ப் பேச்சுக்களை நம்பி மக்கள் ஏமாந்து கொண்டிருக்க முடியாது. நிலையான அபிவிருத்திக்கும், ஜனாதிபதியின் தூரநோக்குப் பாதைக்கும் கிழக்கு மாகாண சபையும், முதலமைச்சரும் என்றும் தயாராக உள்ளனர் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
  மட்டக்களப்பு மாவட்டத்தில் 17,000க்கும் மேல் தமிழ் மக்கள் வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கையினையும், மாகாணசபையினையும், குறுகிய 2 வருடத்திற்குள் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது வரவேற்கக்கூடிய விடையம். நிச்சயம் எதிர்வரும் 3 வருடங்களுக்குள் அதிகமான மக்கள் தமிழ் அரசியலின் உண்மையை உணர்வார்கள். அதன் பின்பே உண்மை சேவையின் மூலம் மக்களின் மலர்மாலை கௌரவத்தினை ஏற்றுக்கொள்வோம். மாகாண சபையினை மக்கள் தங்களின் சேவைக்காகவே எங்களுக்காக வாக்களித்தார்கள். மக்களின் கோரிக்கைகளை ஏற்று நாம் சேவை செய்ய இன்னும் என்றும் தயாராக உள்ளோம். மாறாக மலர்மாலைகளுக்கும், பொன்னாடை கொரவத்தினையும் மக்கள் எமது கொள்கைகளை ஏற்கும் வரை தள்ளிவைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
  அண்மையில் மட்டக்களப்பு இளைஞர் ஒன்றியப் பணிமனையில் நடைபெற்ற இலங்கை இளைஞர் அபிவிருத்தி ஒன்றியக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment