4/23/2010

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய பிரான்ஸில் தடை

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பிரான்ஸில் தடை செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது. இதன் எதிரொலி ஆபத்தாகயிருக்குமெனப் பலர் அரசை எச்சரித்தபோதும் பிரான்ஸ் அரசாங்கம் இதை அறிவித்தது. பிரான்ஸில் மிக நீண்டகாலமாக இவ்விடயம் விவாதிக்கப்பட்டும் சர்ச்சைக்குள்ளாகியும் வந்தது.
முஸ்லிம் அமைப்புகள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பிரான்ஸில் இந்த நகர்வை வன்மையாகக் கண்டித்தன. வீதிகள், கடைகள், பொதுச் சந்தைகள், பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது சட்ட ரீதியாக தடை செய்யப்படவுள்ளது. பெண்கள் பர்தா அணிவது ஒரு சமூகம் தன்னைத்தானே மூடிக்கொள்வது போன்றது.
ஏனைய கலாசாரங்களைக் கேலி செய்யும் வகையில் இது உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோரிஸின் பேச்சாளர் தெரிவித்தார். சர்கோசி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட முடிவின்போது அவரின் பேச்சாளர் லுக்காட்டங் குறிப்பிட்டார். முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பெண்ணினத்தை அடிமையாக்குவது போன்றது இஸ்லாமிய அறிஞர்களிடையே பர்தா தொடர்பாக வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
பர்தா கலாசார உடையேயன்றி மதரீதியான ஆடையல்ல என பிரான்ஸ் ஜனாதிபதி சர்ஜோஸி குறிப்பிட்டார். அரபு நாடுகள், ஆப்கான், பாகிஸ்தான் என்பவற்றில் முஸ்லிம் பெண்கள் கண்கள் மட்டும் தெரிய ஏனையவற்றை மறைத்து பர்தா அணிகின்றனர்.
பிரான்ஸைப் பொறுத்தவரை இவை தேவையில்லையென்றும் சர்கோஸி சொன்னார். பாராளுமன்றத்தில் பர்தாவை தடைசெய்யும் சட்டத்துக்கு பூரண ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மனித உரிமையின் மேன்மைக்காக இதைச் செய்யவுள்ளோம் என்றும் பிரான்ஸ் அறிவித்துள்ளது. பிரான்ஸில் சுமார் இரண்டாயிரம் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிகின்றனர்.

0 commentaires :

Post a Comment