4/27/2010

தாய்லாந்தில் தொடர்ந்தும் வன்முறை குண்டு வெடிப்பில் எட்டுப் பேர் காயம்

தாய்லாந்தில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ள சிவப்புச் சட்டை அணியினர் தொடர்ந்தும் தங்கள் நிலைகளைப் பலப்படுத்தியுள்ளனர். பாராளுமன்றத்தைக் கலைக்க முப்பது நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ள அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பையும் நிராகரித்தனர்.
ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைந்து செல்லுமாறு அரசாங்கம் விடுக்கும் உத்தரவுகள் அங்கு வன்முறைக்கே வழியேற்படுத்துமென அர்ப்பாட்டக்காரர்களின் தலைவர் சூளுரைத்தார். சுமார் எட்டாயிரம் பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந் நிலையில் அரசாங்கத்திலுள்ள முக்கிய கட்சியின் தலைவருடைய வீட்டுக் கருகாமையில் குண்டொன்றும் வெடித்தது. இதில் எட்டுப் பேர் காயமடைந்தனர். நீண்ட கால அரசியல் வன்முறைகளால் தாய்லாந்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அபிஷித் வெஜ்ஜாஜி குறிப்பிட்டார்.
வதந்திகள் பரவுவதாலும், குண்டுகள் வெடிப்பதாலும் தயாலாந்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தக்ஷின் ஆதரவாளர்களே ஆர்ப்பாட்டத்திலீடுபட்டுள்ளனர்.
 

0 commentaires :

Post a Comment