எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறும் மீள் வாக்களிப்பின் போது, கும்புறுப்பிட்டியலில் உள்ள வாக்குச்சாவடியில் மட்டும் அங்கு பதியப்படும் வாக்குகள் எண்ணப்படவிருப்பதாக திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் எச்.எம்.என். தெனிபிரிய தெரிவித்தார். கும்புறுபிடியவிலுள்ள ஒருவாக்குச் சாவடியின் வாக்குகள் மோசடிகள் இடம்பெற்றதையடுத்து, வாக்குப் பதிவு ரத்துச் செய்யப்பட்டு மீள் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இங்கு 977 பேரே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்களிப்பு அங்கேயே நடைபெற்று, அதே நிலையத்தில் வாக்குகளை எண்ணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாக்களிப்பு நிலையத்திற்கும் வாக்குகள் எண்ணும் பணிகளுக்கும் 50 இற்கும் குறைவான உத்தியோகத்தர்களே ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். |
4/17/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment