தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரியளவு எரிபொருள் தொகுதி ஒன்று அண்மையில் வடக்கில் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தேடுதல்களையடுத்து இந்த எரிபொருள் தொகுதி மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிலத்தின் அடியில் நுட்பமான முறையில் எரிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
18 அடி நீளமும், எட்டு அடி ஆழமும் கொண்ட பாரிய தாங்கியொன்றில் 20,000 - 25,000 லீற்றர் எரிபொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக படையினர் இவ்வாறான தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது
0 commentaires :
Post a Comment