தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஆதரவாளர்கள் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்ட ங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மூன்று நாள் பண்டிகைக் கொண்டாட்டங்களில் திளைத்திருந்த மக்கள் நேற்று மீண்டும் தலைநகர் பாங்கொக்கிலுள்ள பிரதான வர்த்தக நிலையங்களை முற்றுகையிட்டு இயல்பு நிலையைக் குழப்பினர். சிவப்பு ரீசேட் அணிந்த ஆயிரத்துக்கும் மேலான தக்ஷின் ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். எங்கள் நோக்கம் நிறைவேறும்வரை , அரசைக் கவிழ்க்கும்வரை நாங்கள் நகரப் போவதில்லை. நாடு பூராகவிருந்து வரும் எங்கள் சகோதரர்களை கவனிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். இவ்வாறு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற் றுள்ள முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். தாய்லாந்தில் மீண்டுமொரு ஆட்சிக் கவிழ்ப்புக்கு இந்த முற்றுகை இடமேற்படுத்துமென அரசியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பொலிசார், இராணுவத்தினர் திரள் திரளாக வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க முடியாமல் திணறினர். இதனால் ஆர்ப்பாட் டக்காரர்கள் உஷாரடைந்தனர். தாய்லாந்து ஜனாதிபதி அபிஷித் வெஜ்ஜாஜியைப் பதவி விலகுமாறும் நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் தக்ஷினின் சொத்துக்களை மீள ஒப்படைக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. கடந்த சில வாரங்களாக இங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோதும் புத்தாண்டையொட்டி இரண்டு தினங்களாக இது சோர்வடைந்தது. தற்போது மீண்டும் ஆர்ப்பாட்டம் சூடுபிடித்துள்ளது. இதுவரை பிரதமர் அபிஷித் வெஜ்ஜாஜி மக்கள் முன்தோன்றியோ, அல்லது ஊடகங் களுக்கோ எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. ஆனால் அண்மையில் பிரதமருக்கு நெருக்கமான ஒருவர் விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என ஆரூடம் தெரிவித்திரு ந்தார். தாய்லாந்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தைக் கலைப்பதைத் தவிர பிரதமருக்கு வேறு வழியில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கூறினர். ஆர்ப்பாட் டக்காரர்களை அடக்க அரசாங்கம் கையாண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்டுள்ளன. பெருந்திரளான மக்கள் ஒன்று கூடியுள்ளதால் ரபர் தோட்டாக்களைப் பாவிக்குமாறு பொலிசாருக்கு அரசாங்கம் உத்தரவிட்டபோதும் நிலைமை கைமீறிப் போயுள்ளது. |
4/16/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment