4/03/2010

கிழக்கின் அபிவிருத்திக்கும் இயல்பு நிலைக்கும் பங்காளிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளே —

முதலமைச்சர்    சந்திரகாந்தன்.

 

நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் கிழக்குமாகாணம் பலமுனைப்போட்டியினை எதிர்கொள்கின்றது அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 அரசியல்கட்சிகளும் 28 சுயேச்சைக்குழுக்களுமாக மொத்தமாக 360 வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். அதில் அரசியல் கட்சிகளான தமிழரசுக்கட்சியும் , தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குமிடையே பலத்த போட்டி நிலவுகின்றமை விசேட அம்சமாகும். அதனால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்குமாகாண முதலமைச்சருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் அவரது வேட்பாளர் குழாம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிராமம் கிராமமாக சென்று தங்கள் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இதன் ஒரு கட்டமாக இன்று சித்தாண்டி கிராமத்திற்கு சென்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பிரச்சாரக்குழுவினர் சித்தாண்டி பத்திரகாளியம்மன் ஆலய முன்றலில் தங்களது பிரச்சாரக்கூட்டத்தினை நடத்தினார்கள். ஆலய பரிபாலனசபை, கிராம அபிவிருத்திசங்கம், முதியோர் சங்கம், விளையாட்டுக்கழகங்கள், மாதர் அபிவிருத்தி சங்கம் ஆகியோர் ஒழுங்கு செய்த இவ்வரசியல் பிரச்சாரக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பெருமளவிலான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
                                   இப்பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் இன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டிருக்கின்ற இயல்புநிலை மற்றும் ஓரளவான அபிவிருத்தி ஆகியவற்றிற்கு எமது கட்சியின் தோற்றமே முக்கிய காரணம். அதுமட்டுமல்லாது மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அபிவிருத்திபணிகள் அனைத்திற்கும் எமது கட்சியே பங்காளிகள். காரணம் என்னவெனில், கிழக்குமாகாணத்தில் அவ்வாறான ஓர் நிலை ஏற்பட்டதனாலேயே கிழக்கு மாகாணசபை ஊடான அபிவிருத்தி, கிழக்கின் நவதோயம் போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே இவ்வளவு காலமும் எமது மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அவர்களது வாக்குகளை பெற்று சுகபோகம் அனுபவித்த தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் ஒருபுறம், அத்தோடு பெரும்பான்மை கட்சிகளில் சில தமிழர்கள் அவர்கள் எல்லோரும் என்ன சாதிக்கப்போகிறார்கள்? அவர்களால் எதுவுமே செய்ய இயலாது. ஆகவே கிழக்கு மாகாண சபையினை பலப்படுத்தி நாம் எதிர்கொள்கின்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு காணவேண்டுமாக இருந்தால் அது எமது கட்சியினால் மாத்திரம்தான் முடியும் எனவே எமது கட்சியின் சின்னமாகிய படகுச்சின்னத்திற்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என நாங்கள் தயவாக கேட்டுக்கொளகின்றோம் எனக் குறிப்பிட்டார்.img_6569-1


 

0 commentaires :

Post a Comment