நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை தமிழரசுக் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் இத் தேர்தலில் அகில இலங்கை தமிழரசுக்கட்சி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் மூலம் 22 பாராளுமன்ற ஆசனங்களை தமிழரசுக் கட்சி தனதாக்கிக் கொண்டிருந்தது.
இருப்பினும் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் 15 ஆசனங்களுக்கும் குறைவான எம்.பி.க்களையே தமிழரசுக் கட்சியால் வெற்றிபெற முடிந்திருக்கின்றது.
தமிழரசுக்கட்சி இத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் மூன்று ஆசனங்களையும், வன்னி மாவட்டத்தில் இரு ஆசனங்களை யும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு ஆசனங்களையும் இழந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
0 commentaires :
Post a Comment