
கிழக்கு மாகாண முதலமைச்சரையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்களையும் இன்று காரைதீவு மக்கள் ஒன்று திரண்டு வரவேற்றனர். காரைதீவக் கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து ஆலயம் ஊhடாக முதலமைச்சர் அழைத்துச் செல்லப்பட்டார். வேண்ட் வாத்தியங்கள் முழங்க விவேகானந்தா மணிமண்டபம் ஊhடாக பிரதேச செயலகம்வரை இவ்வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. ஆங்காங்கே மாலையுடன் காத்திருநத மக்கள் கூட்டம் முதலமைச்சரையும் தலைமை வேட்பாளர் சத்திய சீலன் உள்ளிட்ட அனைத்து வேடட்பாளர்களையும் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்நது இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய சத்தியசீலன் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வெற்றி உறுதி செய்யும். அதற்கு இந்த கிராமத்து மக்கள் எனக்கு அளித்திருக்கின்ற உத்தரவாதம் சான்று பகர்கின்றது எனக் குறிப்பிட்டார்.

0 commentaires :
Post a Comment