சம்மாந்துறை வலயத்திலுள்ள மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய 86 வருடகால வரலாற்றில் முதற்தடவையாக அனைத்துப் பாடங்களிலும் அதிசிறப்பு (9ஏ) சித்திபெற்ற மாணவன் மோகன் நிதர்சனன் வரலாற்றுச் சாதனை படைத்தள்ளார்.
1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் 1993 இல் க.பொ.த (சா/த) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்றிலிருந்து 2008 வரை நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் அதிசிறப்புச் சித்தியை எந்த மாணவனும் பெறவில்லை.
2009 க.பொ.த (சா/த) பரீட்சையிலே தோற்றிய மோகன் நிதர்சனன் என்ற மாணவன் முதற்தடவையாக ஒன்பது ‘ஏ’ பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
சம்மாந்துறை வலயத்தில் இம்முறை 9 ‘ஏ’ பெற்ற ஒரே ஒரு மாணவன் நிதர்சனன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மல்வத்தையைச் சேர்ந்த மோகன் ஆசிரியர் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வன் நிதர்சனன் என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment