4/17/2010
| 0 commentaires |
சீன பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 620 ஆக உயர்வு நிவாரணப் பணிகள் துரிதம்; மீட்பு நடவடிக்கையில் ரஷ்ய ஹெலிகள்
சீனாவின் திபெத்பீட பூமியில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 620 ஆக உயர்ந்துள்ளது. திபெத் பீடபூமியில் அமைந்துள்ள குங்ஹாய் மாகாணத்தின் யூஷ¤ மாவட்டத்தில் புதனன்று 7.1 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதனால் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாயின. இடுபாடுகளில் சிக்கி 600க்கும் அதிகமானவர்கள் பலியாயினர். 10 ஆயிரம் பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்களும், இராணுவ வீரர்களும் பூகம்பம் பாதித்த பகுதிகளுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பூகம்பம் பாதித்த ஜீகு என்ற நகரில் 85 சதவீத வீடுகள் தரைமட்டமாகி விட்டன. யூஷ¤ மாவட்டத்தில் அரச அலுவலகங்களும், பள்ளிக் கூடங்களும், புத்த மடாலயங்களும் நொறுங்கியுள்ளன. இங்கு மூன்று பள்ளிகள் தரைமட்டமானதில் 66 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் பலியானார்கள். மலை மீது உள்ள இந்த மாவட்டத்தில் தற்போது இரவில் பூஜ்யம் டிகிரிக்கு குறைவான வெப்பநிலை காணப்படுகிறது. வீடுகளை இழந்த மக்கள் இந்த குளிரில் தவிர்த்து வருகின்றனர். இவர்களுக்கு கூடாரங்களும் போர்வைகளும் கோர்டுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
பூகம்பம் பாதித்த பகுதிகளை சீன துணை அதிபர் ஹ¤ய் லியான்கியூ நேற்றுமுன்தினம் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூன்று பெரிய விமானங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடினமான மலைசரிவுகளில் உள்ளவர்களை மீட்க ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்பு குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த ஹெலிகாப்டர் மூலம் நேற்று 19 பேர் மீட்கப்பட்டனர். பரசூட் பிரிவு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 620 ஆக உயர்ந்தது. குங்ஹாய் மாகாணத்தில் தான் திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா பிறந்தார். இந்த பூகம்பம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள தலாய் லாமா, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான உதவி கிடைக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
0 commentaires :
Post a Comment