இந்திய விஸா நிலையமொன்று எதிர்வரும் மே மாதம் முதல் யாழ் ப்பாணத்தில் இயங்கவுள்ளது. இந்த நிலையம் மே மாதம் 5ம் திகதி திறந்து வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியாவின் தூது வர் அசோக் கே. காந்த் நேற்று தெரி வித்துள்ளார். யாழ்ப்பாணம், மத்திய கல்லூரி யில் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். யாழ். குடா நாட்டு மக்கள் இந்த நிலையத்தில் விஸா விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள வும், அவற்றைக் கையளிக்கவும் முடியும். இதன்படி விஸாவைப் பெற்றுக் கொள்ள மாத்திரமே கொழும்பி லுள்ள இந்திய உயர் ஸ்தானிகரால யத்திற்கு செல்ல வேண்டும் என்று தூதரக அதிகாரி ஒருவர் தெரிவி த்தார். |
4/19/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment