4/15/2010

சீனாவில் நிலநடுக்கம் 400 பேர் பலி

மேற்கு சீனாவில் மலைகள் நிறைந்த பகுதியான சிங் ஹை மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி 400 பேர் வரை பலியாகியுள்ளதுடன் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டிடங்கள்
இடிந்து விழுந்த கட்டிடங்கள்

திபேத் எல்லைக்கருகில் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ள இந்த நில நடுக்கத்தால் ஜீகூ நகர் முழுவதும் இடிபாடுகளால் மூடப்பட்டுள்ளது.
இந்தப் பகுதில் 80 வீதத்துக்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளதுடன் அனேகமானோர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பீதியினால் பெருமளவிலானோர் உயிருக்கு அஞ்சி இருப்பிடங்களை விட்டு வெளியேறி அருகிலுள்ள மலைப்பகுதிகளுக்கு சென்றுள்ளதாக அவர் கூறினார்.
பல கட்டிடங்கள் நொறுங்கி விழுந்துள்ளன
இடிபாடுகளில் பல புதைந்திருக்கக் கூடும் என கவலை

மீட்புப்பணிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கு போதுமான ஆளணி வளமோ கருவிகளுக்கான வசதியோ இல்லாதிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோக மார்க்கங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப்பணியாளர்கள் பெருமளவில் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்டை மாகாணங்களிலிருந்து சுமார் ஐயாயிரம் பேர்வரையிலான நிலநடுக்க மீட்பு நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்
 

0 commentaires :

Post a Comment