4/07/2010

செங்கலடி கரடியநாறு சந்தியில் இருந்து உன்னிச்சை பிரதான வீதியின் பணிகள்நேற்று(05.04.2010)ஆரம்பம்.

செங்கலடி கரடியநாறு சந்தியில் இருந்து உன்னிச்சை பிரதான வீதியின் பணிகள்நேற்று(05.04.2010)தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் உத்தியொக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுமார்20 கோடி ருபா நிதியினை ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இப்பாதை புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபை ஆசிய அபிவிருத்தி வங்கியடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பாதைகள் செப்பனிடப்பட்டத குறிப்பிடத்தக்கது.
கோரளைப்பற்று, ஏறாவூர்பற்று, வவுனதீவு வாகரை போன்ற பிரதேச சபைகளுக்குட்பட்ட வீதிகள் தற்போது முதலமைச்சரின் வேண்டுகோளின்கீழ் செப்பனிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
dsc00287
dsc00288

0 commentaires :

Post a Comment