கிழக்கு உதயம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மஹிந்த சிந்தனைக்கமைவாக ஜனாதிபதி ராஜபக்ஷவின் வழிகாட்டலிலும், ஆலோசனைக்கமைவாகவும் முன்னாள் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் வேண்டு கோளுக்கமைவாகவும் மட்டு. - கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடிப் பாலம் நவீன முறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு அழகுறக் காட்சி தருகின்றது. கிழக்கின் பல்வேறு துறைகளும் இன்றைய காலகட்டத்தில் துரித விருத்தி கண்டு வருகின்ற நிலையில் கல்குடாத் தொகுதியிலும் பல அபிவிருத்தித் திட்டங் கள் முன்னெப்போதுமில்லாதவாறாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமீர்அலி விளையாட்டரங்கும் நவீன விளையாட்டரங்காக அமையப்பெற்று ஓட்டமாவடி நகருக்கு அழகு சேர்க்கின்றது. இவ்விரு அபிவிருத்திப் பணிகளும் ஐ.ம. சு.மு அரசின் காலத்திலேயே தொடக்கி வைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டு இவை மக்களிடம் ஒப்படைக்கப்படும் நிகழ்வு ஓட்டமாவடியில் நடைபெறுவதானது ஒரு வரலாற்று நிகழ்வாகும். அதிலும் விஷேடமாக இந்நிகழ்வில் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டு சிறப்பிப்பதானது இவ் அபிவிருத்திப் பணிகளுக்கு மேலும் மெருகூட்டுகின்றது எனலாம். கிழக்கில் சுனாமிப் பேரலைத் தாக்கத்தினால் அழிவுற்ற கல்லாற்றுப் பாலம், ஒந்தாச்சிமடப் பாலம் ஆகியன துரிதமாக புனரமைப்புச் செய்யப்பட்டு பொதுமக்கள் பாவனைக்கு விடப்பட்டமை கிழக்கு அபிவிருத்தியில் ஒரு மைல்கல்லா கும். அதே போலவே கிழக்கின் நுழை வாயிலாகக் கருதப்படும் ஓட்டமாவடிப் பாலம் பிரித்தானியரால் 1922ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கனரக பாலமாகும். 50 வருட உத்தரவாதம் வழங்கப்பட்டு பாவனையிலிருந்த இப்பாலம் புகையிரதப் பாதை, தரை வழிப்போக்குவரத்து எனப் பாவனைக்குட்படுத்தப்பட்டமையால் 90 களின் பின்பு இப்பாலம் மிகுந்த தேசத்துக்குட்பட்டுக் காணப்படுகிறது. அத்தோடு தேசிய கடதாசி தொழிற்சாலை, விவசாயப் பெரு நிலங்கள், கால்நடைப் பண்ணைகள், மட்டு - கொழும்பு பிர தானவீதி என இப்பாலத்தின் பயன்கள் பலவுள்ளன. அண்மைக் காலமாக இப்பாலம் மிகுந்த சேதமுற்றதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பாவனைக்குட்படுத்தி வந்தனர். இதனை யிட்டு மட்டு. - மாவட்ட மக்கள் பிரதி நிதியான எம். எஸ். எஸ். அமீர்அலி முனைப்புடன் கருமமாற்றியதன் பயனாக கடந்த 2007 நவம்பர் 17ந் திகதி இப்பாலத்துக்கு சமாந்தரமாக புதிய பாலத்தை தனியே தரை வழிக்கென நிர்மாணிக்க அடிக்கல் நடப்பட்டது. இந்நிகழ்வு ஓட்டமாவடிப் பிரதேசத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இப்பாலத்துக்கான நிதியுதவியாக இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக் கமைவாக 400 மில்லியன் ரூபாவை ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.இப்பால நிர்மாணத்துக்கேதுவாக மட்டு. - கெழும்பு பிரதான வீதியும் இரு வழிப்பாதையாக கார்ப்பற் இடப்பட்டு மெருகூட்டப் பட்டுள்ளது. இதன் மூலம் 250 மீற்றர் நீளமான புதிய இரும்புப் பாலம் தனியே தரை வழிப் போக்குவரத்துக்கென இன்று ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்படுகிறது. பழைய பாலம் தனியே புகையிரதப் போக்குவரத்துக்காகப் பாவிக்கப்படும். ஓட்டமாவடிப் பிரதேசத்தில் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ள அமீர்அலி விளையாட்டு அரங்கும் பாரியதொரு அபிவிருத்தித் திட்டமாகும். இப்பொது மைதான இட அமைவு முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹும் எம்.பி. முகைதீன் அப்துல் காதரினால் இனங்காணப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும். இம்மைதானம் தற்போதைய மக்கள் பிரதிநிதி எம். எஸ். எஸ். அமீர் அலியின் முயற்சியினால் விளை யாட்டுத்துறை அமைச்சின் பல கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமீர்அலி விளையாட்டரங்கு எனப் பெயரிடப்பட்டு நவீனத்துவமிக்கதாக உருவாக்கப்பட்டுள்ளது. கல்குடா விளையாட்டுத்துறையில் இது ஒரு மைல்கல். சுமார் 3000 பார்வையாளர் அமரக்கூடியதாக மூன்று பிரமாண்டமான அரங்களுடன் இரவு- பகல் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடாத்தக்கூடிய வகையிலான மின்னொளி மைதானமாக இது வடிவமைக்கப்பட் டுள்ளமை சிறப்பம்சமாகும். இதன் மூலம் இப்பிரதேச விளயாட்டுத்துறை விருத்திக்கும் தற்போதைய அரசு பாரிய பங்காற்றியுள்ளது எனக் கூறமுடியும். |
3/24/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment