3/13/2010

தோழர் தெணியானுடனான கலந்துரையாடல்


வடமராட்சியிலுள்ள பொலிகண்டியை பிறப்பிடமாகக் கொண்ட கந்தையா நடேசு என்பவரே இன்று ‘தெணியான்‘ எனும் புனைபெயரில்  நிலைத்திருக்கும் படைப்பிலக்கியவாதி.
தோழர் தெணியான் அவர்கள் இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் உறுப்பினாராக செயல்பட்டுவந்தவர்.
சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக பல்வேறுபட்ட போராட்டங்களிலும் பங்குகொண்டவர். அதுமட்டுமல்லாது படைப்பிலக்கியத்தினூடாக சாதியக் கொடுமைகளை அம்பலப்படுத்தியும் வந்தவர். தற்போதும் அப்பணியைத் தொடர்ந்தும் மேற்கொண்டுவருபவர். புலிகளின் இராட்சியத்தில் அமைப்பு ரீதியான  சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் தடைசெய்யப்ப்டபோதிலும் தோழர் தெணியான் அவர்கள் சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளை தனது படைப்பிலக்கியத்தினூடாக வெளிப்படுத்தி வந்தவர்.
இவர் ‘விடிவைநோக்கி‘  ‘கழுகுகள்‘  ‘பொற்சிறையில் வாடும் புனிதர்கள்‘ ‘மரக்கொக்கு‘  ‘காத்திருப்பு‘ போன்ற நாவல்களை எழுதியவர். அத்தோடு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பல்வேறு கட்டுரைகளையும் எழுதியவர்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிறுபான்மைத் தமிழர் மகாசபையும் சுயேட்சையாக போட்டியிடுகின்றது. அச்சுயேட்சைக் குழுவின் பிரச்சாரப் பிரிவும் தோழர் தெணியான் தலைமையிலே செயல்பட்டுவருகின்றது.
எதிர்வரும் வியாழக்கிழமை இரவு ஐரோப்பிய நேரம் 8மணிக்கு ரி.பி.சி வானொலியில் தோழர் தெணியானுடனான கலந்துரையாடல்  நடைபெற உள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  சிறுபான்மைத் தமிழர் மகாசபை பங்குபெறவேண்டிய அவசியம் , தேவை குறித்த  உரையாடல்கள் நடைபெறும்.  மேலதிக விபரங்களையும்  நேயர்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

0 commentaires :

Post a Comment