இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்பரப்பில் அமைந்துள்ள கச்சத்தீவின் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா கடந்த பல ஆண்டுகளாக, பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக சர்ச்சைக்குள்ளாகி வந்தது.
குறிப்பாக இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான ஆயுத மோதல் காரணமாக, கடந்த ஆண்டுகளில் கச்சத்தீவுக்கு செல்ல தமிழக மீனவர்கள் முயன்றபோது, அதற்கு இந்திய கடற்படையும் இலங்கை அரசும் உரிய அனுமதிகள் அளிக்காமல் தடுப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன.
சில ஆண்டுகளில் இந்த திருவிழா முற்றாக நிறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
விடுதலைப்புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் தோற்கடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த பிறகு நடக்கும் முதல் திருவிழா என்பதால், கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா குறித்து தமிழ்நாட்டின் தென் பகுதியிலும், இலங்கையின் வடக்கிலும் மேலதிக ஆர்வம் காணப்பட்டது.
இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கச்சத்தீவு சென்று சுமுகமான சூழ்நிலையில் திருவிழா நடத்தியதாகும் அறியப்படுகிறது.
இந்த ஆண்டு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை யாழ் மறை மாவட்டம் நல்ல முறையில் செய்திருந்ததாகவும், இந்திய இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.
0 commentaires :
Post a Comment