ஈரானுக்கு எதிரான அனைத்து சதி முயற்சிகளையும் முறியடித்துள்ளதுடன், எதிரிகளை தோற்கடித்துள்ளதாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சென்ற சனிக்கிழமை ஈரான் மக்கள் புதுவருடத்தைக் கொண்டாடினர். இப்புது வருடத்தை முன்னிட்டு ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத், ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கொமய்னி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலே எதிரிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஈரானில் கடந்த வருடம் ஜூன் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. இதில் மீண்டும் அஹ்மெதி நெஜாதே வெற்றிபெற்றார். இத் தேர்தல் முடிவுகளை குழப்பும் நோக்குடன் அமெரிக்காவும், பிரிட்டனும் ஈரானின் எதிர்க் கட்சிகளைத் தூண்டின. இதனால் பெரும் ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் இடம்பெற்றன. பலர் மரணமடைந்தனர். ஏராளமானோர் கைதாகினர். இந்நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்தி ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கு நாடுகள் முயற்சித்தன. இச்சதி முயற்சிகளை ஈரான் வெற்றிகரமாகக் கையாண்டது. இதனைக் குறிக்கும் முகமாகவே அஹ்மெதி நெஜாத், அயதுல்லா அலி கொமய்னி ஆகியோர் மேற்கண்டவாறு அறிக்கைகளை வெளியிட்டனர். ஈரான் முன்னாள் மன்னர் ஷா ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு 1977ம் ஆண்டு இஸ்லாமிய ஆட்சியேற்படுத்தப்பட்ட பின்னர் ஈரானின் மீது எதிரிகள் சந்தர்ப்பமொன்றை எதிர்பார்த்துள்ளனர். அவை சென்ற ஜனாதிபதித் தேர்தலில் அரங்கேற்றப்பட்டன. எதிரிகளின் (மேற்குலகின்) கைப்பொம்மைகளாக எவர் செயற்பட்டாலும் அவர்களின் கைகள் துண்டிக்கப்படுமென ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் எச்சரிக்கை விடுத்தார். |
3/22/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment