பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபேன்ட், புலிகளுக்கு ஆதரவு வழங்கும் அமைப்பான உலகத் தமிழர் அமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டமையைக் கண்டித்து தேசிய சுதந்திர முன்னணி நேற்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
கொழும்பில் அமைந்துள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலயம் முன்பாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து இலங்கைக்கான பிரித்தானி யாவின் பதில் உயர்ஸ்தானிகரி னூடாக டேவிட் மிலிபேனுக்கு மக ஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டிஷ் பிரதமர் மற்றும் மிலிபேன்ட் ஆகி யோர் புலிகளின் சீருடையுடன் இருப்பது போன்ற பாரிய கட்அவுட் களையும் ஏந்திய வண்ணம் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகஜர் கையளிக்கப்பட்டதனைய டுத்து விமல் வீரவன்ச ஊடகங்களு க்கு கருத்து தெரிவிக்கையில், பிரிட் டிஷ் பிரமர் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் உலகத் தமிழ் அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டமை இலங்கையின் இறைமைக்கும் ஒரு மைப்பாட்டுக்கும் பாதிப்பை ஏற் படுத்தும் செயலெனத் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் இலங்கையுடன் நட்பு நாடாக தொடர்ந்து இருக்கவும் இராஜதந்திர உறவை நீடி த்துக்கொள்ளவும் விரும்பின் தீவிரவாத அமைப்புகளுக்கு துணை போகும் இதுபோன்ற செயலை பிரிட்டிஷ் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.
0 commentaires :
Post a Comment