3/04/2010

மட்டு. மாவட்ட வாக்குச்சீட்டு இரண்டரை அடி நீளம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகளும், 28 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதால் வாக்குச்சீட்டு இரண்டரை அடி நீளமாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
என்றுமில்லாதவாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தேர்தலில் வாக்குச்சீட்டில் 45 சின்னங்கள் இடம்பெறவுள்ளன.
இரண்டரை அடி நீளமாக வாக்குச்சீட்டு இருப்பதால் வாக்காளர்கள் தமது விருப்பத்துக்குரிய சின்னத்தை தெரிவு செய்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதுடன் வாக்காளர்கள் வாக்களிப்பதிலும் நேரம் எடுக்கும் எனவும் வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனசெத பெரமுன, இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, எல்லோரும் பிரஜைகள் எல்லோரும் மன்னர்கள், இடதுசாரி விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, சிங்களயே மகா பூமி புத்திரக் கட்சி, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய தேசிய மாற்று முன்னணி, முஸ்லிம் விடுலை முன்னணி, ஜாதிக சங்கவத் பெரமுன, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, யக்சத் லங்கா மகாசய உட்பட 17 அரசியல் கட்சிகளும் 28 சுயேச்சைக் குழுக்களும் களத்தில் போட்டியிடுகின்றன.

0 commentaires :

Post a Comment