நேற்று பிரச்சாரப் பணிகளுக்காக சென்றிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் தமது கிராமம் தொடர்பான பிரச்சினைகளை எடுத்துக் கூறிய மடடக்களப்பு கொக்குவில் கிராம மக்கள் தமது ஊர் வீதிகள் செப்பனிட வேண்டும் அத்தோடு அழிவடைந்துள்ள ஆலயங்களை புனர் நிர்மானம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் 30 000ருபாய் பணத்தை கொடுத்து பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெறுகின்ற பௌர்ணமி பூஜையிஜனை செய்யும்படி கேட்டிருந்தார். அப்பூஜை இன்று மாலை 4.00மணிக்க இடம்பெற இருக்கிறது. இப் பூஜை வழிபாட்டில் கடசியின் தலைவரும் கிழக்கு மாகாண மதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை கலந்து கொள்ளும்படி மக்கள் கேட்டுக் கொண்டார்கள். இதனடிப்படையில் இன்று கொக்குவில் மக்களால் முதலமைச்சருக்கு மிகப் பெரிய வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment