3/24/2010

பிரான்ஸ் உள்ளூராட்சித் தேர்தலில் ஜனாதிபதி சாகோஸின் கட்சி தோல்வி

பிரான்ஸில் நடந்த பிராந்திய (உள்ளூராட்சி) தேர்தலில் ஜனாதிபதி நிக்கலஸ்சர் கோஸியின் கட்சியான யு. எம். பி. தோல்வியடைந்தது. எதிர்க்கட்சியான சோஷலிஸ்ட் கட்சி 56 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது. அண்மையில் பிரான்ஸின் 22 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடந்தது. இதில் 21 உள்ளூராட்சி மன்றங்களை எதிர்க்கட்சி கைப்பற்றியது.
தேர்தல் வெற்றி குறித்து எதிர்க்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- பிரான்ஸ் மக்கள் ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் நிராகரித்துள்ளனர். ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியைக் கைப்பற்ற முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதியை அவசர மாகச் சந்திக்கவுள்ளதாகக் கூறிய அந்நாட்டின் பிரதமர் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயவுள்ளதாகத் தெரிவித்தார். ஜனாதிபதி சர்வகோஸிவிரைவில் அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளதாகவும் பிரதமர் பதவி விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகள் தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸி முன்னெடுத்த வேலைத் திட்டங்களையும், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கப் போதுமான நடவடிக்கை எடுக்காததையும் மக்கள் கடுமையாக கண்டித்தே வாக்களித்துள்ளதாக அவதானிகள் கூறினர்.
 

0 commentaires :

Post a Comment