3/24/2010

விருப்பு வாக்கு வேட்டை சூடுபிடிக்கின் றது.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக் கின்றது. விருப்பு வாக்கு வேட்டை சூடுபிடிக்கின் றது. விருப்பு வாக்கு முறையினால் தேர்தல் போட்டி கட்சிகளுக்கிடையில் அல்லாமல் கட்சிகளுக்கு உள்ளேயே நடைபெறும் நிலை விரும்பத்தகாத வகையில் உருவாகியிருக்கின்றது. ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இந்த நிலை பெரிதாகக் காணப்படாத போதிலும் காலப்போக்கில் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி க்கு உள்ளேயான போட்டி உக்கிரமடைந்து வருகின்றது.
விருப்பு வாக்கு நடைமுறையில் இருப்பதால் இன்றைய தேர்தல் முறை ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகின்றது என்பதை யாரும் நிராகரிக்க முடியாது. பெருந்தொகை யாகப் பணம் செலவழித்து வேட்பாளர்கள் போஸ்டர்கள் ஒட்டுகின்றார்கள். எங்கு பார்த்தாலும் வேட்பாளர்களின் கட் அவுட்டுகளும் போஸ்டர்களுமே கண்ணில் படுகின் றன. அவற்றை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் விடுத்த பணிப்புரையைச் சரியான முறையில் நிறைவேற் றுவதில் சிரமங்கள் இருப்பது போல் தெரிகின்றது.
தங்கள் இலக்கங்களை வாக்காளர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு இதனிலும் பார்க்கக் காரியவலுவான வழி வேறு எதுவும் இல்லை என்கின்றனர் வேட்பாளர்கள். இன்றைய தேர்தல் முறையின் சீர்கேட்டுக்கு விருப்பு வாக்கு முறை காரணமாக இருப்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ள லாம்.
விருப்பு வாக்கு முறையின் கீழ் ஒரு வாக்காளர் தனது பிரதிநிதியைத் தெரிவு செய்வதில்லை. மூன்று வேட்பாளர் களுக்குத் தனது வாக்குகளை அளிக்கின்றார். இவர்களில் தனது பிரதிநிதி யார் என்பதில் இந்த வாக்காளருக்குத் தெளிவு இல்லை.
விருப்பு வாக்கின் மூலம் மாவட்டமொன்றில் தெரிவு செய்ய ப்படும் பிரதிநிதிகள் அந்த மாவட்டத்துக்கான பிரதி நிதிகளாக இருப்பார்களேயொழிய தனித்தனித் தொகுதி களுக்கான பிரதிநிதிகளாக இருக்கமாட்டார்கள். வாக்காளர் களுக்கும் பிரதிநிதிக்குமிடையே நெருக்கமான உறவு நிலவுவது இதில் சாத்தியமில்லை.
தொகுதிவாரி முறைத் தேர்தல் வேட்பாளர்களுக்கும் வாக்கா ளர்களுக்கும் நன்மையானது. வேட்பாளர் பெருந் தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியதில்லை. கட் அவுட்டுகளும் போஸ்டர்களும் இல்லாமலேயே அவர் தன்னை அறிமுகப்படுத்த முடியும். அதேபோல் வாக்காள ரும் வேட்பாளரை நன்கு அறிந்து கொள்வார். இரு வருக்குமிடையே வலுவான உறவு நிலவ முடியும். ஒரு தொகுதியின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுபவர் அத்தொகுதியின் அபிவிருத்தியில் கூடுதலான கவனம் செலுத்துவார் என்பதால் தொகுதிகள் சம அளவில் அபிவிருத்தி அடைவதற்கும் வாய்ப்பு உண்டு.

0 commentaires :

Post a Comment