3/05/2010

அண்ணாமலை பல்கலைக்கழகம் தனது வெளிவாரிப் பட்டப்படிப்பினை கிழக்கிலும் நிறுவியது.

இந்தியாவில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணணாமலைப் பல்கலைக்கழகம் இலங்கையலும் தனது கல்விச் சேவையினை விஸ்த்தரிக்கின்றது. இதன் முதற் கட்டமாக கிழக்கு மையத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பணியினை இன்று (03.03.2010)உத்தியோக பூர்வமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.
பேராசிரியர் எஸ்.சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் சந்திரகாந்தன் பல்கலைக்கழகத்தின் அனுமதி கிடைக்காத மாணவர்கள் தமது பட்டப்படிப்பினை மேற்கொள்வதற்கு இது ஓர் சந்தர்ப்பமாக அமையும். இவ்வளவு காலமும் கல்வித்துறையில் பின்நோக்கிச் சென்றிருந்த எமது சமூகம் தற்போது முன்னேறி வருகின்றது. அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு இது போன்ற பிரத்தியேக கல்விச் செயற்பாடுகள் எமது மாவட்டத்திற்கு பெரிதும் பயனாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.



0 commentaires :

Post a Comment