3/22/2010

சகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டைகள் தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

சகல வேட்பாளர்களுக்கும் விசேட அடையாள அட்டை வழங்குவதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக தேர்தல் ஆணை யாளர் டபிள்யு. பி. சுமணசிரி தெரிவித்தார். தேர்தலில் 7696 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.
இவர்களுக்கு அந்தந்த பிரதேச மாவட்ட செயலகங்களினூடாக விசேட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதோடு, சகல வேட்பாளர்களின் விபரங்களும் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வேட்பாளர்களுக்கு வாக்குகள் எண்ணும் நிலையங்களுக்குச் செல்வதற்காகவும் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் வசதியாக அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
இதேவேளை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராயும் முக்கிய கூட்டமொன்று நேற்று முன்தினம் (20) தேர்தல் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள், உதவித் தேர்தல் ஆணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

0 commentaires :

Post a Comment